"மகிழ்ச்சியின் உச்ச நரம்பை தொட்ட கமல், இனி வரும் காலமும் இதே போல அமைய..."
என்னதான் 4 வயதில் இருந்து நடித்துக்கொண்டிருந்தாலும், கமலுக்கும் அதிர்ஷ்டத்திற்கும் ரொம்ப தூரம். ஒரு படம் ஹிட்டாக வேண்டும் என்றால், நடிப்பின் எந்த மூலைக்கு வேண்டுமானாலும் செல்ல ரெடியா இருப்பார். ஆனால் என்ன இதுவரைக்கும் அவர் போட்ட உழைப்புக்கு, எதிர்பார்த்த பலன் கிடைத்ததில்லை. இப்போ யார் யாரோ ஆஸ்கார் ரேஸில் இருப்பதாக சொல்றாங்க. என்னைக்கேட்டால் உண்மையான ஆஸ்கார் நாயகன் என்றால், அது கமல் மட்டுமே.
அன்பே சிவம் படம் வெளியான அப்போ ஒருவர் கூட சீண்டி பார்க்கவில்லை. படம் வந்து 10 வருடங்களை கடந்துவிட்ட நிலையில் இப்போ கொண்டாடிட்டு இருக்காங்க. அதுதான் கமல் ராசி. எதுவுமே அவர் நினைத்த நேரத்தில் நடக்காது. எதிர்காலத்தில் நடக்கப்போவதை இப்போதே கணித்துகூறிவிடுவார். அவரை எல்லோரும் வித்தியாசமா பார்ப்பாங்க. ஆனால் அவர் சொன்னபடியை நடக்கும் போது பிரம்மிச்சு போவாங்க. டிஷ் மூலம் படம் ஒளிபரப்ப போறேன்னு சொன்ன அப்போ தியேட்டர் உரிமையாளர்கள் வானத்துக்கும், பூமிக்கும் குதிச்சாங்க. இப்போ ஓ.டி.டி வந்த பிறகு வாய் திறக்க முடியாமல் இருக்காங்க.
தமிழ் சினிமாவில் இப்போ இருக்க கேமரா தொழில்நுட்பம் எல்லாம் எப்போதே கமல் கொண்டுவந்துவிட்டார். அவருடைய அருமை தெரியாமல், அப்போ யாரும் காது கொடுத்து கேட்கல. இப்போ அதற்காக கோடி கோடியா பணம் கொட்டி ஆட்களை தேடறாங்க. இவ்வளோ காலம் பட்ட கஷ்டம், விக்ரம் படத்தின் மூலமா ஹிட் கொடுத்திருக்கு. மகிழ்ச்சியின் உச்ச நரம்பை தொட்ட கமல், இனி வரும் காலமும் இதே போல அமைய வேண்டும் என நினைக்கிறார். அவருடைய துர்ரதிர்ஷ்டம் இத்தோடு விலகுமான்னு பார்க்கலாம்.