புதுமுக இயக்குனர் பிரதீப் நடிப்பில் வெளிவந்த படம் லவ் டுடே. யாரும் எதிர்பார்க்காத கதைக்களம். எல்லோருடைய வாழ்க்கையிலும் நடந்திருக்கும் சம்பவத்தை முன்னிலைப்படுத்தி எடுக்கப்பட்ட படம் என்பதால், சூப்பர் ஹிட் வெற்றி கண்டது. இந்த படத்தை பார்க்கும் ஒவ்வொரு ரசிகனும், அதில் வரும் காட்சிகளை தன்னுடைய அனுபவத்தோடு தொடர்புபடுத்தி பார்க்க வைத்ததே பிரதீப் கதையின் வெற்றியாகும். சரி இவ்வளோ நேரம் பாஸிட்டிவ் எல்லாம் சொல்லியாச்சு. குறைகளை சொல்லியே ஆகணும்ல.
பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவர் கார்த்திக் குமார், லவ் டுடே படம் எடுத்ததற்காக, பிரதீப் வருத்தப்பட போகிறார் என கூறியிருக்கிறார். இப்போதைய சூழ்நிலை அவருக்கு சாதகமாக இருந்தாலும், 10 வருடம் கழித்து பிரதீப் இந்த படத்தை இயக்கியதை நினைத்து வருத்தப்படுவார். படம் நல்லா இருக்கு; அதை குறை சொல்ல முடியாது. ஆனால் ஒருவரை மட்டம் தட்டி, மரியாதை குறைவாக பேசி வெற்றி காண்பதெல்லாம் ஒரு வெற்றியை இல்லை என்றார் கார்த்தி.
ஆண்களை பெருமையாக பேச வேண்டும் என பெண்களை பல காட்சிகளில் இழிவு படுத்தி இருப்பார்கள். இந்த படம் தமிழில் நல்ல வரவேற்பை பெற்றாலும், மற்ற மொழிகளில் டப் செய்து வெளியான போது பல சர்ச்சைகள் எழுந்தது. அவங்களும் இதே கருத்தை தான் முன்வைத்தனர். உண்மையாலும் எல்லோருமே ஏற்றுக்கொள்ளும் படமாக இருந்தால், மற்ற மொழிகளிலும் சாதித்து இருக்கும். லவ் டு டே தமிழை தாண்டி வெற்றி காணவில்லை. அடுத்து எடுக்கும் படங்களில் பிரதீப் திருத்திக்கொள்ள வேண்டும் என்றார்.