இன்னைக்கு ஓராளவுக்கு நடிக்கத்தெரிந்தால் யார் வேண்டுமென்றாலும் சினிமாவில் நுழைய முடியும். அந்தக்காலத்தில் அப்படிக்கிடையாது. மேடை நாடகத்திலும், நடிப்பு பட்டறையிலும் நன்கு தேர்ச்சி பெற்று வந்த நடிகர், நடிகைகள் மட்டுமே பெரிய அளவிலான புகழைப் பெற்றிருந்தனர். மேடை நாடகத்தில் வெளிப்படுத்திய முகபாவனைகளை, சினிமாவுக்குள் கொண்டு வந்து பிரம்மிக்க வைத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். அவர் மாதிரியே மேடை நாடகத்தில் நடித்துப் பழகி சினிமாவுக்குள் நுழைந்த நடிகர்கள் கொடுத்த காசுக்கு மேலாகவே நடிப்பாங்க. ஏன்னா அவங்களுக்கு நடிப்பு பற்றிய இம்மி நுணுக்கம் கூட எப்போதும் அத்துப்படியா இருக்கும். இன்னைக்கு சவுண்ட் பார்ட்டிகள் எல்லாம், தான் பெரிய நடிகன்னு சொல்லி சுத்திக்கிட்டு திரியிறாங்க. என்னுடைய அறிவுக்கு யார் யாரெல்லாம் கொடுத்த காசுக்கு மேல் நடிப்பாங்கன்னு ஒரு பட்டியலை கொடுத்துள்ளேன். இதில் யார் பெயர் எல்லாம் விட்டுப்போச்சுன்னு சொல்லுங்க. அதற்கான பதிலும் காத்திருக்கு.
1. சிவாஜி கணேசன்
2. டி.ராஜேந்தர்
3. விஜயகாந்த்
4. நடிகர் விவேக்
5. வடிவேல்
6. தேவதர்ஷினி
7. ஊர்வசி
8. சமுத்திரக்கனி
9. கோவை சரளா
10 எஸ்.ஜே சூர்யா
11. சத்யராஜ்
இவங்க எல்லாம் எப்போதும் கொடுத்த காசுக்கு மேல் நடிப்பவர்கள். மீதி அனைவரும் ஏதோ ஒரு கட்டத்தில், நன்றாக நடித்து தங்களை நிரூபித்துக் கொள்ள ஏதோவொரு காட்சியில் அப்படி கொடுக்கும் காசை விட அதிகமாக நடிக்கிறார்கள்.