notification 20
Daily News
இதுதான் கண்ணு மண்ணு தெரியாமல் காதலிக்குறதா? நடு ரோட்டில் அரைமணி நேரம்! ச்சீ! ச்சீ! இந்த வீடியோ பாருங்க பர்ஸ்ட்!

கண்ணு மண்ணு தெரியாமல் காதல் பண்ணாதன்னு சொல்லுவாங்க. அதுக்கு அர்த்தம் அப்போது புரியவில்லை. இப்போது புரிகிறது. மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் எப்போதும் பிஸியாக இருக்கும் சாலை அருகே காதல் ஜோடிகள் நின்றிருந்தனர். திடீரென என்ன தோன்றியதோ தெரியவில்லை ரெண்டு பேரும் பேசிக்கிட்டே நடு ரோட்டிற்கு சென்றனர். காதலன், காதலியை பார்த்து ஏதோ சொல்லி இருக்கான். 

மவராசன் என்ன சொன்னானோ தெரியவில்லை, நடு ரோட்டில் நின்றவாறே இருவரும் கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்க ஆரம்பித்தனர். ரோட்டில் வாகனங்கள் சென்று கொண்டே இருக்கிறது. அதைக்கூட ரெண்டு பேரும் கவனிக்கவில்லை. சிலர் அவர்கள் மீது வாகனத்தை விட்டு மோதிடுவோம் என பயந்து ஓரமாக ஒதுங்கி நின்றனர். சுற்றி இருந்தவர் கத்தி கூப்பிட்டு பார்த்தனர். இருவரும் துளி கூட நகரவில்லை. உடும்பு மாதிரி ஒட்டிக்கொண்டு நின்றனர். 

பொது மக்கள் ஆச்சரியத்தில் வீடியோ எடுக்க ஆரம்பித்தனர். போக்குவரத்து பாதிக்கப்பட்டதை அறிந்த டிராபிக் போலீசார் அங்கு விரைந்து வந்து ஜோடியை அப்புறப்படுத்த முயன்றனர். பின்னர் அங்கு மக்கள் கூடியதை அடுத்து நடப்பதை அறிந்த காதல் ஜோடி சுயநினைவுக்கு வந்து விலகினர். காதல் ஜோடியின் இந்த செயல் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts