notification 20
Rainforest
#University of Birmingham : 2,26,705 ரூபாய் உதவி தொகையோடு படிக்க வைக்கறாங்க - அள்ளி கொடுக்கும் ஐரோப்பா!

ஐரோப்பாவில் உயர்கல்வி பயில விரும்பும் தகுதியான இந்திய மாணவர்களுக்கு University of Birmingham ஆனது Undergraduate பட்டப்படிப்பிற்கான உதவித்தொகையை வழங்குகிறது. இது இந்திய மாணவர்களுக்கான பிரத்யேக ஸ்காலர்ஷிப் (University of Birmingham India Outstanding Achievement Scholarships) என்பதை கவனிக்க வேண்டும். ஐரோப்பாவின் பிரசித்திப்பெற்ற பல்கலைக்கழகங்களுள் ஒன்று University of Birmingham. பல்வேறு துறைகளில் உயர்கல்வி பயில விரும்பும் தகுதியான இந்திய மாணவர்களை தேர்வு செய்து அவர்களுக்கு  Outstanding Achievement Scholarships என்கிற Undergraduate பட்டப்படிப்பிற்கான Scholarship-யை வழங்கவுள்ளது.

1. Arts and Law, Engineering and Physical Sciences, Life and Environmental Sciences, Social Sciences போன்ற படிப்புகளை இதில் தேர்ந்தெடுத்துக்கொள்ள முடியும்.

2. இதற்கான தகுதியாக சில கட்டுப்பாடுகளை வைத்துள்ளனர். முதலாவதாக இந்திய நாட்டின் குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும். University of Birmingham அட்மிஷன்யை பெற்றிருக்க வேண்டும்.

3. ஏற்கனவே இங்கு படித்துக்கொண்டிருக்கும் மாணவர்கள் MBChB Medicine மற்றும் Surgery அல்லது  BDS Dental Surgery ஆகிய படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

4. அட்மிஷன் பெற்ற பின் அங்கு தங்கி பயில்வதற்கு மற்றும் விமான பயணங்களுக்கு தேவைப்படும் பொருளாதார வசதி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

5. University of Birmingham India Outstanding Achievement Scholarshipக்கு தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு கல்வி கட்டணத்திற்காக முதலாம் ஆண்டு இந்திய மதிப்பில் 2,26,705 ரூபாய் வழங்கப்படும்.

6. University of Birmingham-ன் இந்திய கிளை நிர்வாகங்களின் வாயிலாக இந்திய மாணவர்கள் இந்த உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

7. டெல்லியில் உள்ள The Chopras, டெல்லியில் உள்ள Aspire Overseas Education, நாக்பூரில் உள்ள Krishna Consultants, கூர்கானில் உள்ள IDP Educational Consultants ஆகிவற்றை தொடர்பு கொள்ள வேண்டும்.

8. இதற்கு தேர்வு செய்யப்படும் மாணவர்கள் முழுக்க முழுக்க மதிப்பெண் மற்றும் கல்வி திறனின் அடிப்படையிலேயே தேர்வாக முடியும்.

9. விண்ணப்பிக்கக் கடைசி நாள் ஜூன் 7 என University of Birmingham-ன் அதிகாரபூர்வ இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

10. மேலும் விவரங்களை அறிந்து கொள்ள https://www.birmingham.ac.uk/undergraduate/funding/University-of-Birmingham-India-Outstanding-Achievement-Scholarships.aspx என்ற இணையதளத்தை பார்க்கவும்.

#University of Birmingham: இது இந்தியாவில் உள்ள திறமையான மாணவர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் உதவித்தொகை என்பதால், தகுதி வாய்ந்தவர்கள் முயற்சிக்கும் போது உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகத்தில் நம் நாட்டு மாணவர்களும் பயிலும் வாய்ப்பு கிடைக்கும்.

 

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts