maybemaynot
notification 20
Daily News
500 மாணவிகளுக்கு மத்தியில் உட்கார்ந்த மாணவன்: அதிர்ச்சியில் மயக்கம்? மாணவிகளால் அடுத்து நடந்த டுவிஸ்ட்!

பீகாரில் உள்ள ஷெரீப் அல்லாமா இக்பால் கல்லூரியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவர் மணிசங்கர், நாலந்தா அருகே உள்ள பிரில்லியன்ட் பள்ளியில் தேர்வு எழுத சென்றார். தேர்வு அறைக்குள் 500 மாணவிகள் இருந்தனர். இதைப் பார்த்த மணிசங்கர் ஆச்சரியமும் பதட்டமும் அடைந்தார், ஏனென்றால் இப்படி இருக்கும் என்று அவர் எதிர்பார்க்கவில்லை. பதற்றத்தில் வியர்வை கொட்டியுள்ளது. பதற்றம் அதிகமாகி திடீரென மயக்கமடைந்தார்.

இதையடுத்து சதர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது. மயக்கம் அடைந்த போது காய்ச்சலும் இருந்ததாக டாக்டர்கள் கூறினர். இதில் ஆச்சர்யம் என்னவென்றால், யாரை பார்த்து மணிசங்கர் பதற்றமாகி மயக்கம் அடைந்தாரோ, அதே மாணவிகள் தான் மயக்கத்தின் போது அவரை மீட்க உதவினர். 

நமது உடலில் பல்வேறு வகையான வியர்வை சுரப்பிகள் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். சில வியர்வை சுரப்பிகள் கழுத்து, நெற்றி, அக்குள் மற்றும் தொடைகளில் காணப்படுகின்றன. இந்த வியர்வை சுரப்பிகள் நாம் மிகவும் அழுத்தமாக அல்லது பயமாக இருக்கும் போது வியர்வையை வெளியிடுகின்றன. அவற்றின் செயல்பாடு அளவு கடந்து போகும் போது, இது போல மயக்கம் வருவது இயல்பு தான் என்கின்றனர். 

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts