notification 20
Highrise
#The Lion King: தி லயன் கிங் படத்தில் விலங்குகள் தத்ரூபமாக படமாக்கப்பட்டது எப்படி.? பிரம்மிப்பூட்டும் வீடியோ!

1994 ஆம் ஆண்டு வெளியான 'The Lion King' கார்ட்டூன் படத்தின் மீளுருவாக்கமே இந்தப் படம். 2016 ஆம் ஆண்டு வெளியான 'The jungle Book' படம் பெற்ற பிரம்மாண்ட வெற்றியால் இயக்குநர் Jon Favreauக்கு 'The Lion King'கை இயக்கும் வாய்ப்பை வழங்கியுள்ளது டிஸ்னி. பழைய 'The Lion King'கின் வெற்றியே அதன் சென்டிமென்ட் காட்சிகளும், கதாபாத்திரங்களின் உணர்வுகளும் பார்வையாளர்களுக்குக் கடத்தப்பட்ட விதமும்தான். அதை மீண்டும் சரியாய் செய்கிறது புதிய 'The Lion King'. தியேட்டர் பக்கம் போகாதவர்களை கூட குழந்தைகளை கூட்டிக்கொண்டு தியேட்டரை நோக்கி ஓட வைத்தது இந்த படம்.

எப்படி விலங்குகள் தத்ரூபமாக கண்முன் வந்தது?

 

என்ன தான் கிராபிக்ஸ் காட்சிகளாக இருந்தாலும் ஒரு இடத்தில், அதுனுடைய கம்ப்யூட்டர் செயல்பாடு தெரிந்து விடும். ஆனால் lion king படத்தில், ஆரம்பத்தில் இருந்து இறுதி காட்சி வரை சிங்கத்தின் பிடறி மயிர் அசைவது வரை தத்ரூபமாக காட்டப்பட்டிருந்தது. அது எப்படி சாத்தியமானது என்பது குறித்து படத்தின் படக்குழுவினர் பிரபல ஆங்கில ஊடகத்துக்கு விளக்கியுள்ளனர். அது குறித்த காட்சிகளை மேலே உள்ள வீடியோவில் காணலாம்.

#The Lion King: ஒரு சிறிய காட்சியை படமாக்கவே எவ்வளவு மெனக்கெட்டு வேலை செய்துள்ளனர் என்பதை இந்த வீடியோவை பார்த்த பின்பு தான் அறிந்துகொள்ள முடிகிறது. | #Movie ஒரே திரைக்கதை, ஆனா படம் வேற! இது நம்ப முடியுதா?

 

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts