notification 20
Highrise
இந்தியாவில் மிகவும் விரும்பப்பட்ட சில மோட்டார் பைக்குகள்..!!

your image

 

கடந்த கால நினைவுகளில் பலருக்கும் தங்கள் மனதை விட்டு நீங்காத இடத்தை பிடித்திருக்கும் சில வாகனங்கள். அது அவர்கள் அப்பா முதலில் பயன்படுத்திய வாகனமாக இருக்கலாம் அல்லது முதலில் விரும்பிய வாகனமாக இருக்கலாம். எதுவாக இருப்பினும் இன்னும் தங்கள் நினைவு அலைகளில் அவ்வப்போது வந்து செல்லும் அவற்றின் சுவடுகள். ஒரு சிலர் அந்த வாகனங்களை எல்லாம் விற்க மனதில்லாமல் இன்னும் வீட்டின் ஒரு ஓரமாக கிடத்தி வைத்திருப்பார்கள். அந்த அளவிற்கு அன்றைய வாழ்வியலோடும் குடும்பத்தோடும் ஒன்றிப்போனவை அவை.

அப்பா நாளைக்கு ஊருக்கு அழைத்துக்கொண்டு செல்லப்போகிறார் என்றாலே, ஒருவித குஷி சிறுசுகளிடத்தில் மெல்ல படர ஆரம்பித்து விடும். TVS 50, TVS XL. SCOOTER, BULLET, JAVA பைக்குகள் இதெல்லாம் ஒரு தலைமுறையையே கட்டிப்போட்டு ஆட்டிப்படைத்தவை. அதுவும் RX 100 சவுண்டுக்கு என்றே ஒரு கூட்டம் அடிமையாக இருக்கும். அப்போது வந்த உயர் ரக பைக்குகள் உடனேயே சிலர் ரேஸ் வைத்து கொள்ளும் அளவிற்கு சீறிப்பாயும். அதுவே அரசு வேலையில் இருப்பவர் என்றால் SCOOTER வைத்திருப்பார் என்பது எழுதப்படாத விதி. கொஞ்சம் வியாபாரம் சார்ந்த தொழில் நடத்தி வந்தவர்களுக்கு TVS XL லோடு கணக்கில் இழுத்து தள்ளும்.

அதுவே விவசாயம் சார்ந்ததொழிலில் ஈடுபடுபவர்களுக்கு TVS 50 தான் கண்கண்ட தெய்வம். புல்கட்டுகளை முன்னால் கட்டுக்கட்டாக ஏற்றிக்கொண்டு, உட்கார இடமே இல்லாமல், தாவி குதித்து HAND BARயை பிடித்துக்கொண்டு  லாவகமாக ஓடிச்செல்லும் காட்சி கிராமத்திற்கே உரித்தான பாணி. இப்படி மனிதர்களின் வாழ்வியலோடும், அன்றாட நிகழ்வுகளோடும் பின்னிப்பிணைந்த ஒரு சில இரு சக்கர வாகனங்களுக்கு இன்னும் சமுதாயத்தில் மதிப்பு இருக்கிறது.

என்னதான் CC கணக்கில் புது புது வண்டிகள் இப்போது வந்தாலும், விபத்தை தவிர பலரது வாழ்வில் எந்த வித மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் அவைகள் எல்லாம் பலரது வாழ்வை புரட்டிப்போடும் திருப்பத்தை கொடுத்தவை. அவற்றின் தொகுப்புகள் ஒரு சிலவற்றை இங்கே இடம்பெறச்செய்திருக்கிறோம்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts