ரவீணா தாஹாவுக்கு இப்போது தாங்க 18 வயதாகிறது. இப்போது தான் இவர் அதிகாரப்பூர்வமாக பெரிய பெண்ணாக மாறியுள்ளார். ஆனால் 18 வயதை தொடுவதற்கு முன்னரே பலருக்கும் தெரிந்த பக்கா பிரபலமாக மாறிவிட்டார். திரைப்படங்களில் சிறிய வேடங்களில் நடித்துக்கொண்டிருந்தவர் இப்போது சின்னத்திரையில் நாயகியாகவும் நடித்து வருகிறார்.
இந்த வயதிலேயே இவரை 1 மில்லியனுக்கும் அதிகமானோர் இன்ஸ்டாவில் பாலோ செய்து வருகின்றனர். ஒவ்வொருவருக்கும் எப்போது அதிர்ஷ்டம் அடிக்கும் என்பதை கணிக்கவே முடிவதில்லை. டிக் டாக் மூலம் பிரபலமடைந்த மிருணாளினி தற்போது சினிமா ஹீரோயினாகி விட்டார். அவருக்கே இப்போது தான் 1 மில்லியன் பாலோவர்கள் வந்திருக்கின்றனர். ஆனால் அவரை விட வயதில் சிறியவராக இருக்கும் ரவீணா, அவருக்கு முன்பாகவே அந்த சாதனையை படைத்து விட்டார்.
இவர் அடிக்கடி பல வித்தியாசமான புகைப்படங்களை வெளியிட்டு ஆச்சர்யமூட்டி வருகிறார். கொஞ்சம் வித்தியாசமாக இருக்க வேண்டும் என நினைத்து மேலே பாரம்பரிய உடையும் கீழே ஜீன்ஸும் அணிந்து கொண்டு சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். சிவப்பு நிற உடையில் கண்ணைப்பறிக்கும் அழகுடன் தோன்றும் ரவீணாவை பார்த்து அவரது ரசிகர்கள் எல்லாரும் மயங்கிவிட்டனர் போல.
அவரது அழகில் மயங்கிப்போன ரசிகர்கள் நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க, மருதாணி தோட்டத்துக்கே மருதாணி யாரு வச்சா? என்று வர்ணித்து வருகின்றனர். இதெல்லாம் போதாது என இன்னொருத்தர் நீங்க ஒரு உலக அதிசயம் என்று கூறியுள்ளார். இவரும் நம்ம ஊரை சேர்ந்த பொண்ணு தான். இவரை ஏன் உலக அதிசயம் என சொல்லிருக்காரு என்பது தான் புரியவில்லை. மனுஷன் அந்த அளவுக்கு இவரோட அழகில் மயங்கிட்டாரு போல.
இன்னும் சில புகைப்படங்களில் மேக்கப் எதுவும் இல்லாமல் கூட அவர் அழகாக இருப்பதாகவும் அவரது ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். எப்போதும் பொம்மைகளை கட்டிப்பிடித்தபடி புகைப்படங்களை எடுத்து போடுவதில் அதிக ஆர்வம் காட்டுகிறார் ரவீணா. இவருகிட்ட இதுமாதிரி இன்னும் எத்தனை பொம்மை இருக்குதோ யாருக்கு தெரியும்? சரி, இவருடைய கெட்டப்பை பார்த்தா உங்களுக்கு என்ன தோன்றுகிறது? நம்ம வீட்டுப் பொண்ணு மாதிரி இருக்காங்களா இல்ல உலகின் அதிசய பெண்மணி போல இருக்காங்களா?