புரட்டாசிமாதம்பிறந்ததுமுதல்மக்கள்கோவில்களுக்குசெல்வதுவாடிக்கையாகிவிட்டது. அரசுவாரஇறுதிநாட்களில்கோவிலுக்கு சென்று வழிபாடு செய்யபக்தர்களுக்குஅனுமதிஇல்லைஎன்றுசொல்லிஇருந்தாலும், புரட்டாசி சனிக்கிழமையில்பெருமாளைதரிசனம்செய்யாமல்இருப்பதுஏதோகுற்றஉணர்வைஏற்படுத்தவே, சரிவெளியில்இருந்தாவதுதரிசிக்கலாம்என்றுகோவிலுக்குசென்றிருந்தேன். எதிர்பார்த்ததுபோலவேகோவிலும்நடைசாத்தப்பட்டுஇருந்தது.
தரிசனம்முடித்துகாணிக்கைசெலுத்தஉண்டியலைநோக்கிசெல்லும்போதுகண்ணில்பட்டதைஎன்னால்நம்பமுடியவில்லை. அங்குவைக்கப்பட்டிருந்த QR Code என்னை வியப்படைய செய்தது. பக்தர்கள்தங்கள்காணிக்கைகளை QR Code மூலமாகவும்செலுத்தலாம்என்றுஎழுதப்பட்டு, அருகில் GPay, Phonepe, Paytm போன்றவற்றின் QR Code வைக்கப்பட்டிருந்தது. கடவுளுக்கே QR Code மூலம் காணிக்கை செலுத்துவது உண்மையில் வித்தியாசமாக இருந்தது. இதற்கிடையே என்னைப்போல சிலர் அவர்களால் இயன்ற 10, 20 மற்றும் 50 ரூபாய் பணத்தை QR Code மூலம் செலுத்தவே அவர்களிடம் சற்று உரையாடலை தொடர்ந்தேன்.
அதாவது இந்த சிறிய கோவில்களில் இவ்வாறு செலுத்துவது மட்டுமல்லாமல் பெரிய கோவில்களிலும் இவ்வாறான செயல்முறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாம். தற்போது இருக்கும் காலகட்டத்தில் இவ்வாறு பக்தர்கள் வழங்கும் காணிக்கை மற்றும் நன்கொடை ஆகியவை அந்தந்த கோவில் நிர்வாகத்தின் கணக்கில் நேரடியாக சென்று சேர்க்கப்படுகிறது. இதன் மூலமாக அரசாங்கத்தின் பார்வைக்கு அனைத்து கணக்குகளும் நேரடியாக செல்வதாக ஒருவர் கூறினார்.
மற்றுமொருவர், பூசாரிகளுக்கு வழங்கும் மறைமுகமான காணிக்கைக்கு இது எவ்வளவோ பரவாயில்லை என்று கூற, உண்மையில் இது நல்ல திட்டம் தான் என்று தோன்றியது. பிறகென்ன நானும் ஒரு 20 ரூபாய் செலுத்திவிட்டு அங்கிருந்து வீட்டிற்கு கிளம்பினேன்.