விஜய் டீவியில் இந்த விளம்பரம் வந்ததும் வந்தது, நம்ம பசங்கள கையில் பிடிக்க முடியல. சினிமா பாடல்களை யூடியூப்பில் தேடும் இளசுகள், இப்போ ஒரு விளம்பர வீடியோ எங்க இருக்குன்னு தேடிக்கிட்டு இருக்காங்க. இந்தக்கால இளம் தலைமுறையின் இரசனை அறிந்து விளம்பரம் எடுத்திருக்காங்க போல, விளம்பரம் வந்து எத்தனை வருடங்களானாலும், அடிக்கடி சோஷியல் மீடியாவில் வைரலாகி, அவங்களுக்கு பைசா செலவில்லாமல் ப்ரமோஷன் கிடைத்துவிடுகிறது. பிரித்வி உள்ளாடை விளம்பரத்தில் நடித்த பெண் யாருன்னு இப்போ தெரியணுமாம்.
அதற்காக கம்பெனி யூடியூப் சேனலை தேடிக்கண்டுபிடித்து, விளம்பர வீடியோக்கு கீழே, யார் அந்த மாடல்? அவங்க பெயர் என்னான்னு கேட்டு இருக்காங்க. பாவம் அவங்க எப்படி செல்லுவாங்க. எல்லாம் பொறுப்பும் விளம்பர ஏஜென்சி கைகளில் கொடுக்கப்படும். அவங்க பார்த்து யாரை வேண்டுமானலும் நடிக்க வைக்க முடியும். இப்போ அந்த மாடல் அழகி பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்றால், விளம்பர ஏஜென்சி யாருன்னு தெரியணும். அதற்கு பிறகே எல்லா தகவலும் வெளிவர ஆரம்பிக்கும். ஆனால் இது போட்டி நிறைந்த பிஸினஸ் என்பதால், அவரை வேறு நிறுவனங்கள் கொத்தாக தூக்கிசெல்லும் என்பதை அறிந்து, சீக்ரெட்டா வெச்சி இருக்காங்க.
நம்ம ஊரு நடிகையாக இருந்தால் அது சாதாரண விளம்பரமா போயிருக்கும். யாருன்னே தெரியாத ஒரு மாடல் அழகியை உள்ளே கொண்டு வந்து, அவர் சினிமா நடிகை அளவுக்கு அழகாக இருந்தால், பசங்க சும்மா இருப்பாங்களா என்ன? அதுவே இந்த விளம்பரத்தின் வெற்றி தந்திரமாகிவிட்டது. திருப்பூரை தலைமையிடமாக கொண்ட நிறுவனம், வெனிசுலா நாட்டில் இருந்து மாடல் அழகியை அழைத்து வந்து, 18 வயதுக்கு மேற்பட்ட வயதுடையவர்களை குறி வைத்து இந்த விளம்பர வீடியோ எடுத்திருக்காங்க. Prithvi innerwears Padded Bra என தேடினால், யூடியூப் வீடியோ வரும்.
இந்த விளம்பரம் வைரலானத்தை தொடர்ந்து, அந்தப் பெண்ணை தமிழ் சினிமாவில் நடிக்க வைக்க, டைரக்டர்கள் வரிசை கட்டி நிக்கிறாங்க. நமக்கு விளம்பர மாடலிங் மட்டும் தான் வரும், சினிமா எல்லாம் செட் ஆகாது என நேக்கா கூறி, அவங்க எஸ்கேப் ஆயிட்டாங்க. என்ன, இப்படிப்பட்ட வசீகரமான முகவாகு கொண்ட பெண், சின்ன விளம்பரத்தோடு நின்றுவிட்டாரே என்ற ஏக்கம், வீடியோக்கு கீழே வரும் கமாண்டுகளை பார்த்தாலே தெரிகிறது. யாம் பெற்ற இன்பத்தை நீங்களும் பெற வேண்டுமென்றால், மேலே உள்ள வீடியோவை முழுசா பார்த்துவிட்டு, நைசா குளோஸ் பண்ணிக்கலாம்.