Daily News

பெங்களூரு போன இனி வேலைக்கு பறந்தே போகலாம் - ஹெலிகாப்டர் டாக்ஸிக்கு கட்டணம் இவ்வளோ தானா? நீங்களும் ஒரு டிக்கெட் போடலாம்!

Sep 30 2022 07:02:00 PM

இந்தியாவின் தகவல் தொழில்நுட்ப நகரமாக விளங்கும் பெங்களூரு, சில வாரங்களுக்கு முன் கனமழையால் பாதிக்கப்பட்டது. படகு, ஸ்பீட் போட், டிராக்டர், ஜேசிபி இயந்திரங்களில் 50 ரூபாய் கட்டணத்தில் மக்கள் பயணம் செய்தனர். தற்போது மழை மற்றும் வெள்ளம் நீங்கி மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். இந்த சூழலில் ஒரு விமான நிறுவனம்  நாங்க இருக்கோம் என்று களத்தில் குதித்துள்ளது. புதுமைகளுக்கு பஞ்சமில்லாமல் , பெங்களூரில் புதிய ஹெலிகாப்டர் டாக்ஸி சேவையை வழங்க உள்ளதாக fly blade நிறுவனம் அறிவித்துள்ளது.

Helicopter taxi Bangalore fly blade

இந்த ஹெலிகாப்டர் டாக்ஸி மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஃப்ளை பிளேட் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து H125 ஹெலிகாப்டர்களை டெலிவரி செய்கிறது. அக்டோபர் 10ல் ஹெலிகாப்டர் சேவை தொடங்குகிறது. இந்த ஹெலிகாப்டர் டாக்ஸியில் ஒருமுறை பயணம் செய்ய ரூ.3,250 வசூலிக்கப்படுகிறது. முதல் கட்டமாக, பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் இருந்து HAL பகுதிக்கு இந்த சேவை வழங்கப்படுகிறது.

Helicopter taxi Bangalore fly blade

மக்களின் வரவேற்பை பொறுத்து வெயிட்ஃபீல்ட் மற்றும் எலக்ட்ரானிக் சிட்டி பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்படும். ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து தற்போது ஆர்டர் செய்யப்பட்டுள்ள ஹெலிகாப்டர்கள் 5 முதல் 6 பேர் வரை அமரும் வசதி கொண்டதாக இருக்கும் என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அமித் தத்தா தெரிவித்தார் .