notification 20
Lushgreen
கான்கிரீட்டில் கம்பிக்கு பதில் மூங்கில் சாத்தியமா..? | Bamboo reinforced concrete | BRC

your image

 

முதலில் BRC பற்றி பார்ப்பதற்கு முன் இந்த REINFIRCEMENT என்றால் என்ன என்பதை பார்த்து விடுவோம். அதாவது கான்கிரீட் அதிக அழுத்து திறன் கொண்டது. ஆனால் இழுவைதிறன் குறைவு. அதனால் தான் கான்கிரீட் இன் இழுவை ஏற்படும் (அதாவது விரிவடையும் பகுதி) அடி பகுதியில் அதிக இழுவை திறன் கொண்ட கம்பிகள் கான்கிரீட்டினுள் வைக்கப்படுகிறது.

சரி இப்போது இந்த கம்பிகளுக்கு பதிலாக நாம் மூங்கிலையும் பயன்படுத்த முடியும்.

காரணம் மற்ற மரங்களை விட அதிக நார் தன்மை கொண்டது மூங்கில் அதனால் அதிக இழுவை திறன் கொண்டது.
மற்றும் நல்ல உறுதி தன்மை கொண்டவை,எளிதில் மக்காத தன்மை கொண்டவை. இது அனைத்தையும் விட சுலபமாக கிடைக்க கூடியவை.கம்பியை விட பல மடங்கு விலை குறைவானவை. நாமே இதனை உற்பத்தி செய்து பயன்படுத்த முடியும் என்பதாலேயே கார்பரேட் நம்மை இதன்மீது கவனம் செலுத்த விடாமல் பார்த்து கொண்டதுதான் அவர்களுடைய வெற்றி.
நமது பாரம்பரிய தற்சார்பை உடைத்து வெற்றி கண்டனர்.

மூங்கில்கள் பற்றி:

மூங்கில் என்பது மரம் அல்ல அது ஒரு புல் வகை.இந்தியாவில் 100 வகைகளுக்கு மேல் மூங்கில்கள் உள்ளன.பெரும்பான்மையானவை நடுப்பகுதியில் துளை உடையவை சிலவகைகள் துளைகள் இல்லாதவை. 3 இஞ்சுக்கு குறைவாக உள்ளவை சிருவாரை எனவும் அதற்கு மேல் உள்ளவை பெருவாரை மூங்கில் எனவும் எங்கள் பகுதியில் அழைக்கப்படுகிறது. இவை வேகமாகவும் வறட்சியையும் தாங்கி வளரக்கூடியது.

நம் பாரம்பரியத்தில் இதனுடைய பங்கு வியக்கத்தகுந்தது.சாதாரண தொழினுட்பம்,கருவிகள் கொண்டே இதனை பயன்படுத்த முடியும்.விவசாய மற்றும் வீட்டு உபகரணங்கள் முதல் வீடு கட்ட வரை இதனை நம் முன்னோர்கள் பல இடங்களில் பயன்படுத்தி வந்தனர். இதனை பயன்படுத்தாத இடமே இல்லை,பாடை கட்டும் வரை இது தொடர்கிறது...

இந்த கான்கிரீட்க்கு தேவையான மூங்கில்களை தேர்ந்தெடுப்பது எப்படி?

மூங்கில் முதிர்ச்சி அடைந்து இருக்க வேண்டும்.அது முதிர்ச்சி அடைந்த வுடன் தண்டுகள் பழுப்பு நிறத்திலும்,இலைகள் காய்ந்தும் போய்விடும் அவைதான் தரமான மூங்கில்கள். மூங்கில்கள் வெட்டும்போது அதனை வளர்பிறையில் வெட்ட வேண்டும்.
கோடைக்காலங்களில் ,குளிர் காலங்களிலும் வெட்டுவதை தவிர்க்கவும்.

Sesoning or treatment process:

இது தான் மூங்கில் ஆயுள் காலத்தையும் உருதியையும் அதிகரிக்க நாம் செய்யும் செய்முறை ஆகும். இது மூங்கிலை பூச்சு புழுக்கள் மற்றும் கரையான் போன்றவற்றிடம் இருந்து பாதுகாக்கிறது. அதன் decomposition காலத்தை அதிகரிக்கிறது. இதற்கு பல வழிகள் இருந்தாலும் மிக சுலபமாக முறை காப்பர் சல்பேட் கரைசலில் 24 மணி நேரம் ஊற வெய்ப்பது அல்லது தீயில் வாட்டி எடுப்பது இவ்விரண்டு முறைகளும் சிறந்தவை.

மூங்கிலை கான்கிரீட் உடன் இரண்டு முறைகளில் பயன்படுத்தலாம்.

Exposed bamboo reinforcement:

இம்முறையில் முதல் படத்தில் காட்டியுள்ளபடி மூங்கில் அல்லது மர சட்டங்களை நேராகவே,சாய்தலமாகவோ குறிப்பிட்ட இடைவெளியில் அமைத்து அதன்மீது நெருக்கமாக இரண்டாக அல்லது மூன்றாக (மூங்கிலில் விட்டத்தை பொறுத்து) பிளக்கப்பட்ட மூங்கில்கள் நெருக்கமாக ஆணி கொண்டு அடிக்கப்பட்டு அதன் மீது கோழி வலை போடப்பட்டு 2 அங்குலம் கான்கிரீட் போடப்படுகிறது. மூங்கில்கள் மற்றும் மர சட்டங்கள் இடைவெளிகள் அறையின் அளவையும் ,மூங்கிலில் தாங்கு திறனையும் கொண்டு கணக்கிடப்படுகிறது.இதனை அறிய UTM மெசின் கொண்டு tension test செய்யலாம்.


 

Unexposed bamboo reinforcement

இம்முறையில் சாதாரண கான்கிரீட் அமைப்பில் கம்பி வெய்ப்பதை போல மூங்கில்கள் பிளக்கப்பட்டு வைக்கப்படுகிறது.மூங்கில்கள் முழுவதும் கான்கிரீட் அமைப்பினுள்ளே இருக்கும்.வெளியே தெரியாது. இம்முறையிலும் மூங்கில் இழுவை திறன் கணக்கிடப்பட்டு அதற்கேற்ப மூங்கில்களின் இடைவெளிகள் தீர்மானிக்கப்படுகிறது. இந்த இரண்டு முறையிலும் சிமெண்ட் இல்லாமல் சுண்ணாம்பு கொண்டு கூட கான்கிரீட் போடலாம் இதற்கு தரமான சுண்ணாம்பு அவசியம்.

 

தகவல்: பொறியாளர் ஹரிபிரசாத்

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts