சினிமாவில் இருக்கும் நடிகர், நடிகைகளின் உண்மையான வயதை கண்டுபிடிக்க முடியாமல் நாம் தான் திண்டாடிக்கொண்டு இருக்குறோம் என்று பார்த்தால் கூகுள் கூட சில நேரங்களில் பிரபலங்களின் வயது விஷயத்தில் தவறான முடிவுகளை காட்டி நம்மை குழப்பத்தில் ஆழ்த்துகிறது. இதை ஏன் இப்போது சொல்கிறேன் என்றால் 90களில் பிரபலமாக இருந்த நடிகை ஒருவர் தி டீரென 18 கிலோவுக்கு மேல் எடை குறைத்து 16 வயசு பொண்ணு மாதிரி மிகவும் இளைமையான தோற்றத்துக்கு மாறியுள்ளார். இவருடைய இந்த மாற்றம் எப்படி சாத்தியமானது என்பது தான் இணையவாசிகள் பலருக்கும் இருக்கும் குழப்பமே.
என்னதான் ஜிம்முக்கு போய் உடற்பயிற்சி செஞ்சாலும் நமக்கு தொப்பை அவ்வளவு சீக்கிரத்தில் குறைவதில்லை. வாக்கிங், ஜாக்கிங், யோகா என எல்லாத்தையும் செஞ்சாலும் ஒரு இன்ச் இடுப்பு சைஸ் குறைவதே சிம்ம சொப்பனமாக இருக்குறப்போ இந்த சினிமா பிரபலங்கள் மட்டும் எப்படி பொசுக்குன்னு உடல் எடையை குறைக்கிறாங்க? எனக்கு இருக்கும் இந்த சந்தேகம் உங்கள் எல்லோருக்குமே இருக்கும். ஏனெனில் பிரபலங்கள் தாங்கள் உடற்பயிற்சி மூலம் தான் உடல் எடையை குறைத்தேன் என்று நம்மிடம் சொல்வாங்க. ஆனால் அது வடிகட்டின பொய் என்பது நமக்கு நன்றாகவே தெரியும். திரைக்கு பின்னால் அவர்கள் சில பல வேலைகள் செய்து உடல் எடையை குறைப்பது, கூட்டுவது போன்ற காரியங்களை செய்வாங்களாம். அப்படித்தான் நம்ம நடிகையும் ஏதோ ஒரு வேலை செஞ்சு உடல் எடையை தாறுமாறாக குறைத்துள்ளார்.
பலாப்பழம் மாறி இருந்தவங்க தி டீரென பலாக்கொட்டை போல மாறியதால் அவருடைய ரசிகர்களுக்கே சந்தேகம் வந்து பிளாஸ்டிக் சர்ஜரி செஞ்சிகிட்டீங்களா அல்லது வேற ஏதாவது சிகிச்சை செஞ்சு உடல் எடையை குறைச்சீங்களா என சரமாரியாக கேள்விகளை கேட்டுள்ளனர். தன்னைப்பார்த்து இப்படி கேள்விக்கணைகளை தொடுத்த ரசிகர்கள் மீது க டும் கோ பம் கொண்ட அந்த நடிகை அவர்களை கன்னாபின்னாவென திட்டிவிட்டாராம். இதனால் அவருடைய இமேஜ் ரொம்பவே டேமேஜ் ஆகிவிட்டது.
சும்மா இருந்த நம்மை சொறிஞ்சு விட்டுட்டு நம்ம வாய் மூலமே நமக்கு ஆப்படிச்சிட்டாங்களே என வருத்தத்தில் இருக்கும் அந்த நடிகை இனிமேல் எந்த புகைப்படத்தையும் இணையத்தில் வெளியிடக்கூடாது என்று முடிவு செய்துள்ளாராம். இவர் உடல் எடை குறைத்து ஸ்லிம்மாக மாறியுள்ளது பல இளம் நடிகைகளுக்கும் பொறாமையை ஏற்படுத்தியுள்ளதாம். அதனால் அவர்கள் தான் ஆட்களை ஏற்பாடு செய்து இவரிடம் கேள்வி கேட்டு வெறுப்படைய வைக்கும்படி கூறியதாக சில வதந்திகள் வந்துகொண்டு இருக்கிறது. மொத்தத்துல நம்ம 90ஸ் நடிகை வாய்விட்டு வம்பில் சிக்கிக்கொண்டார் அவ்வளவு தாங்க மேட்டர்.