notification 20
Daily News
46 மைனர் பெண்கள் கர்ப்பமா? மெத்த படித்த கேரளாவில் இப்படி பண்ணி வெச்சு இருக்கானுங்க! வீட்டுக்குள் இருந்தாலும் விட்டுவைப்பதில்லை!

கேரளாவில் போக்ஸோ வழக்குகளின் அதிகரிப்பு இந்திய அளவில் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட போக்ஸோ வழக்குகள் அதிகரித்துள்ளதாக புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. இது ஒரு ஆபத்தான போக்கு. கவலைக்குரிய விஷயம் என்னவென்றால், குழந்தைகள் தங்கள் வீடுகளுக்குள் பாதுகாப்பாக இருக்க வேண்டிய கொரோனா லாக்டவுன் காலத்தில் சித்திரவதை காரணமாக 46 மைனர் பெண்கள் கர்ப்பமாகியுள்ளனர்.

மலையாள செய்தித்தாள் அறிக்கையின்படி, 2020ம் ஆண்டில் கேரளாவில் 3056 போக்ஸோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை 2021ல் 3559 ஆகவும், 2022ல் 4586 ஆகவும் அதிகரித்தது. இது இரண்டு ஆண்டுகளில் அதிவேக அதிகரிப்பை காட்டுகிறது. இந்தப் போக்கு குழந்தைகள் தங்கள் வீடுகளுக்குள்ளும் பாதுகாப்பாக இருக்கிறார்களா என்ற கேள்வியை எழுப்புகிறது. கேரளா போன்ற கல்வியறிவு அதிகம் உள்ள மாநிலத்தில் இதுபோன்ற குழந்தைகள் வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. 

POCSO வழக்குகளின் அதிகரிப்புக்கு கொரோனா லாக்டவுன் ஒரு காரணமாகும். இந்த காலகட்டத்தில், குழந்தைகள் வீட்டிலேயே இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் அவர்கள் குடும்ப ஆண்களாலே பாலியல் துஷ்பிரயோகத்திற்கு ஆளாகும் கொடுமை நடந்தது. குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை விவகாரம் கேரளாவில் மட்டுமல்ல, நாடு முழுவதும் பிரச்சனையாக உள்ளது. தேசிய குற்ற ஆவணக் காப்பக தரவின் படி, 2019ம் ஆண்டில், கற்பழிப்பு, பாலியல் வன்கொடுமை மற்றும் கடத்தல் உள்ளிட்ட குழந்தைகளுக்கு எதிரான 106,958 வழக்குகள் பதிவானது. 

Share This Story

Written by

முருகானந்தம் View All Posts