இந்த நம்பரை பார்த்தால் கார் அல்லது வேறு ஏதோ வாகனத்தின் பேன்சி நம்பராக இருக்கும் என்று நீங்க நினைப்பீங்க. ஆனால் உண்மை அதுவல்ல. இது ஒரு ஊரின் பெயராகும். ஊரோட பின்கோடு என்றும் நினைச்சுக்காதீங்க. இந்த எண் தான் ஊரின் பெயர். பின்கோடு தனியா இருக்குது. அதோட இதை சேர்த்து குழப்பிக்க வேண்டாம்.
வித்தியாசமா பெயரை வைக்கலாம். ஆனா இப்படியெல்லாம் வைப்பது மிகவும் குழப்பான செயலாகும். பதினேழு எழுபது (1770) என்பது டவுன் ஆஃப் 1770 என்றும் அழைக்கப்படுகிறது. இது ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பகுதியில் உள்ள கடலோர நகரம் ஆகும். மேலும் இது கிளாட்ஸ்டோன் பிராந்தியத்தில் உள்ளது. 2016 ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பில், பதினேழு எழுபது நகரின் மக்கள்தொகை 69 ஆக இருந்தது.
எண்களைப் பயன்படுத்தி இந்த நகரம் உள்ளூரில் 1770 என குறிப்பிடப்பட்டாலும், நகரத்தின் அதிகாரப்பூர்வ பெயர் பதினேழு எழுபது என்பதாகும். இந்த நகரம் ஒரு தீபகற்பத்தில் அமைந்துள்ளது. பதினேழு எழுபது, பூந்தபெர்க் நகருக்கு தெற்கே 120 கிலோமீட்டர் தொலைவில் ஒரு சீல் செய்யப்பட்ட சாலை வழியாக செல்கிறது.
இந்த நகரத்தில் ஒரு சிறிய நிரந்தர மக்கள் தொகை எப்போதும் உள்ளது. விடுமுறை தினங்களில் இங்குள்ள மக்கள் மீன்பிடித்தல், கிரேட் பேரியர் ரீஃப் பயணங்கள் மற்றும் பிற நீர் நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர். தீபகற்பத்தின் வடக்கு முனை பெரும்பாலும் ஜோசப் பேங்க்ஸ் (ரவுண்ட் ஹில் ஹெட்) பாதுகாப்பு பூங்காவின் பாதுகாக்கப்பட்ட பகுதியுடன் உள்ளது.
இந்த நகருக்கு ஏன் இப்படி ஒரு பெயரை வைத்தனர் என்று யாருக்குமே தெரியவில்லை. ஆனால் 1770 என்ற பெயரை வைத்துதான் இந்த நகரை அழைக்கின்றனர். நீங்க இந்த இடத்தின் முகவரியை கேட்க வேண்டும் என்று நினைத்தாலும் 1770 எங்குள்ளது என்றுதான் கேட்க வேண்டும். நம்ம ஊருல இப்படி பெயர் வைத்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்க.