Daily News

10 ரூபாய் காசு வேண்டாம் என்று சொல்லுறாங்களா? உடனே இதைச்செய்யுங்க! புது உத்தரவை பிறப்பித்த தமிழக அரசு!

Nov 24 2022 07:32:00 AM

10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என்ற வதந்தி தமிழகத்தில் அடிக்கடி வந்துகொண்டே இருப்பதால் ரிசர்வ் வங்கி கடுப்பில் உள்ளதாக கூறப்படுகிறது. 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் செல்லும் என பல்வேறு வகையில் விழிப்புணர்வு மேற்கொண்டாலும் தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் இன்னமும் 10 ரூபாய் நாணயங்களை வாங்க பலரும் தயக்கம் காட்டுகின்றனர்.

TNSTC conductors 10 and 20 rupee coin

தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டங்களில் இருக்கும் சிலர் 10 ரூபாய் நாணயங்களை செலவழிப்பதற்காகவே சென்னை வரை வந்து செல்வதாக கூறப்படுகிறது. சென்னையில் 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்கள் நன்றாக புழக்கத்தில் இருக்கிறது. ஆனால் உள்மாவட்டங்களில் பேருந்து, பூக்கடை, ஜெராக்ஸ் கடை என பல இடங்களிலும் 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்களை வாங்க ஆளில்லை.

TNSTC conductors 10 and 20 rupee coinTNSTC conductors 10 and 20 rupee coin

தமிழகத்தில் உள்ள அரசுப்பேருந்துகளில் கூட இந்த பிரச்சனை இருந்து வருகிறது. ஒரு சில நடத்துனர்கள் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாக போக்குவரத்து கழகத்துக்கு தொடர்ந்து புகார்கள் குவிந்த வண்ணம் இருந்ததால் தற்போது ஒரு அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளது யாதெனில் அரசுப்பேருந்துகளில் பணிபுரியும் நடத்துனர்கள் அனைவரும் கண்டிப்பாக பயணிகளிடம் இருந்து 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்களை வாங்கிக்கொண்டு பயணச் சீட்டு கொடுக்க வேண்டும். 10 மற்றும் 20 ரூபாய் நாணயங்களை வாங்க மறுத்தால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. இதற்கு மேலாவது இந்த வதந்தியை தமிழக உள்மாவட்ட மக்கள் மறப்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.