Shoreline

உலக உருண்டைக்குள் உங்களை அடைத்து வைத்தால் எப்படி இருக்கும்? இந்த உருண்டையை பார்த்தா உங்களுக்கு எப்படி தெரியுது?

Oct 06 2021 04:18:00 PM

உலக உருண்டைக்குள் சென்று உலகை சுற்றுவது போன்ற அனுபவம் உங்களுக்கு வேண்டுமென்றால் அதற்கு நீங்கள் சோர்பிங் என்ற விளையாட்டைத்தான் விளையாட வேண்டும். ஒரு பிளாஸ்டிக் பந்து போன்ற வடிவமைப்பை கொண்ட அமைப்புக்குள் உங்களை உள்ளே வைத்து அடைத்து விடுவார்கள். பிறகு சாய்வான மலைப்பகுதி அல்லது சரிவான நிலங்களில் இருந்து அந்த உருண்டை அமைப்பை உருட்டி விடுவாங்க.

zorbing-game

இது பார்ப்பதற்கு ஒரு வேடிக்கையான விளையாட்டாக இருந்தாலும் இதிலும் சில ஆபத்துகள் இருக்கிறது. வேகமாக செல்லும்போது ஒரு சிலருக்கு பய உணர்வு ஏற்படும். நீங்கள் அந்த உருண்டை அமைப்பின் வேகத்துக்கு ஏற்ப தலைகீழாக வட்டமடித்துக்கொண்டே செல்ல வேண்டியது இருக்கும். இந்த வித்தியாசமான விளையாட்டு நியூசிலாந்து நாட்டில் இருந்து தோன்றியதாக கூறப்படுகிறது.

zorbing-game

நிலப்பரப்பில் மட்டுமல்லாது நீர்ப்பரப்பிலும் இந்த விளையாட்டை நீங்கள் விளையாடலாம். மலை உருளல், பூகோள சவாரி போன்ற பெயர்களாலும் இந்த விளையாட்டு அறியப்படுகிறது. இதற்குள் செல்வதற்கு முன் நீங்கள் சிந்தித்து செல்வது நல்லது. உள்ளே சென்று உருளத் தொடங்கியபிறகு அய்யோ அம்மா என்று கத்தினால் பிரயோஜனம் கிடையாது. பயம் மிகுந்த நபர்கள் இந்த விளையாட்டை முயற்சிக்க வேண்டாம்.

zorbing-game

இந்த விளையாட்டில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஒருவர் 570 மீட்டர் தூரம் உருண்டு சென்று கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இந்த விளையாட்டு கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது உங்களுக்கு ஆச்சர்யமாக இருக்கிறதா? சாதனை எப்படிப்பட்டதாக இருந்தாலும் அதை அங்கீகரிப்பாங்க. நியூசிலாந்தை சேர்ந்த ஒரு நபர் இந்த உருளைக்குள் அதிகபட்சமாக 52 கிலோமீட்டர் வேகத்தில் உருண்டு சென்றது கூட கின்னஸ் சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

zorbing-game

இந்த உருண்டைக்குள் குஷன் போன்ற பாதுகாப்பான அம்சங்கள் இருந்தாலும் ஒரு சில மரணங்களும் எதிர்பாராத விதமாக நிகழ்ந்துள்ளது. இருப்பினும் அதை நினைத்து பயப்படத்தேவையில்லை. பாதுகாப்பான இடத்தில் பொழுதுபோக்குக்காக சிறிது தூரம் இதில் சவாரி செய்வதில் எந்த பிரச்சனையும் இருக்காது. வித்தியாசமான விளையாட்டு என்பதால் அதில் இருக்கும் நன்மை தீமைகள் இரண்டையும் தெரிந்துகொண்டு விளையாட வேண்டும் என்பதையும் அனைவரும் நினைவில்கொள்ள வேண்டும்.