#zoomquilt : இந்த வெப்சைட் மட்டும் ஓபன் ஆனா நீங்க ஆடி போயிருவீங்க - சும்மா போய் பாக்கறீங்களா.?
  • 18:04PM Oct 04,2019 India
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 18:04PM Oct 04,2019 India

தினமும் எல்லோரும் செய்வது போல பேஸ்புக் போவது, அது ஃபோர் அடித்தால் வாட்ஸ்ஆப் போவது அதுவும் ஃபோர் அடித்தால் youtube பக்கம் போவது என்று இருக்காமல், வித்தியாசமாக நேரத்தை கழிக்கவும் சில இணையதளங்கள் உருவாக்கியுள்ளனர். அதிலும் சில இணையதளங்கள், இதுகெல்லாம் போய் ஒரு வெப்சைட்டா.? என்று கூட யோசிக்க வைக்கும்.

dark web, deep web என்று இணைய உலகம் அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்து கொண்டிருக்கும் நிலையில், வெறும் 1 % தகவல் மட்டுமே இருக்கும், கூகுள் தேடல் வழி இணையதளங்களை தான் நாம் இன்னும் பயன்படுத்தி கொண்டிருக்கிறோம். கற்றது கை மண்ணளவு என்று தமிழில் சொல்லப்படுவதை போல, நாம் கை மண்ணில் சிறு துளி அளவை தான் நெருங்கி இருக்கிறோம் என்பதே உண்மை.

இன்னும் எத்தனையோ அறியப்படாத தகவல் எல்லாம், இணைய வெளியில் கொட்டிக்கிடக்கிறது. அதனை நம் எப்படி அணுக போகிறோம் என்பதில் தான் சூட்சமம் இருக்கிறது. சீனா போன்ற நாடுகளில் பேஸ்புக், கூகுள் கூட தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் அந்நாட்டு மக்கள் VPN என்ற சேவை மூலம் அனைத்து இணைய தளங்களுக்குள்ளும் செல்கின்றனர். இப்படித்தான் மக்களின் தேடல் ஆர்வம் மிதமிஞ்சிய நிலையை அடைந்து கொண்டிருக்கிறது.

அப்படிப்பட்ட தேடலில் சில வித்தியாசமான இணைய தளங்களும் இருக்கத்தான் செய்கின்றன. அந்த வரிசையில் பிரபலமான இணையதளம் தான் https://zoomquilt.org/ என்பது. இதில் உள்ளே போனால் என்ன இருக்கும் என்று முன்னரே சொல்லிவிட்டால் சுவாரஸ்யம் போய்விடும். என்ன நடக்கிறது என்பதை நீங்களே பார்த்து தெரிந்துகொண்டால் நல்லது. | Willrobotstakemyjob: உங்கள் வேலையை வருங்காலத்தில் ரோபோக்கள் எடுத்துக்கொள்ளுமா.? உடனே இதுல செக் பண்ணுங்க!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top