Rainforest

குகைக்குள் இருந்து ஒரு அழகு தேவதை வந்தால் எப்படி இருக்கும்? வெள்ளைக் குகை தேவதையை பார்க்க நீங்க ரெடியா?

Jun 28 2021 08:37:00 AM

குகைக்குள் இருந்து பாய்ந்தோடும் யும்பில்லா நீர்வீழ்ச்சி தான் அந்த வெள்ளை தேவதையாகும். யும்பில்லா நீர்வீழ்ச்சி நான்கு அடுக்குகளுக்கு மேல் கொண்டுள்ளது. ஒவ்வொரு அடுக்கும் தண்ணீரை காடுகளின் வழியே செலுத்துகிறது. அடுத்த விளிம்பில் செல்லுமுன் வானவில் மூடிய நீர்வீழ்ச்சி குளங்களை சிறிது நேரம் இடைநிறுத்துகிறது. தூரத்தில் இருந்து பார்த்தால் அது காட்டில் இருந்து பிரிந்த வெள்ளி நீரோடை போல அமைதியான மற்றும் அழகான தோற்றதுடன் இருக்கிறது. நீங்கள் இந்த நீர்வீழ்ச்சியை நெருங்கத் துணிந்தால் அதன் மூல சக்தியை உணருவீர்கள்.

yumbilla-falls

இந்த நீர்வீழ்ச்சி நிலப்பரப்பில் விழும் போது புயல் போன்று காணப்படும். யும்பில்லா உலகின் ஐந்தாவது உயரமான நீர்வீழ்ச்சியாகும். இது பெருவின் சச்சபோயாஸுக்கு அருகிலுள்ள மேகக் காடு வழியாக 2,940 அடி உயரத்தில் இருந்து தண்ணீரை கொட்டுகிறது. இந்த நீர்வீழ்ச்சி அழகாக இருந்தாலும் ஆரம்பத்தில் இதைப்பற்றி பலர் கேள்விப்பட்டிருக்கவில்லை. 2007 ஆம் ஆண்டில் பெருவின் புவியியல் நிறுவனம் மேற்கொண்ட பயணத்தைத் தொடர்ந்து இந்த நீர்வீழ்ச்சி கண்டுபிடிக்கப்பட்ட பிறகு தான் இதற்கு சர்வதேச அங்கீகாரம் கிடைத்தது.

yumbilla-falls

இதன் உயரத்தை தீர்மானிக்க ஆராய்ச்சியாளர்கள் லேசர் கருவிகளைப் பயன்படுத்தினர். இந்த நீர்வீழ்ச்சி அமைந்துள்ள காட்டுக்குள் நுழைய உங்களுக்கு ஒரு வழிகாட்டி கண்டிப்பாக தேவை. காட்டுக்குள் நுழைந்ததும் அங்கிருக்கும் பாதைகள் உங்களை ஒரு நீர்வீழ்ச்சியிலிருந்து அடுத்த இடத்திற்கு அழைத்துச் செல்கின்றன. கியூஸ்பஸிலிருந்து நீங்கள் இரண்டு மணி நேரத்திற்குள் யும்பில்லாவை அடைய முடியும்.

yumbilla-falls

யும்பில்லா நீர்வீழ்ச்சிக்கு செல்லும் போது நீங்கள் ப யந்து ஓடாதவரை பறவைகளையும் மற்ற சில உயிரினங்களையும் பார்க்கலாம். முடிந்தவரை அதிகாலையில் புறப்படுவது நல்லது. புகழ்பெற்ற கல்லிட்டோ டி லாஸ் ரோகாஸ் அல்லது ஹம்மிங் பறவைகளைப் பார்க்க உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும். மழைக்காலங்களில் டிசம்பர் முதல் ஏப்ரல் வரை இந்த நீர்வீழ்ச்சி இன்னும் சுவாரஸ்யமாக இருக்கிறது. ஆனால் அங்கு செல்வதற்கான வழியும் கடினமாக இருக்கும்.

yumbilla-falls

இந்த நீர்வீழ்ச்சியின் அடிவாரத்தில் நீங்கள் ஜாலியாக நீந்தலாம். குகைக்குள் இருந்து வெளியே வரும் வெள்ளை தேவதை போல இருக்கும் இந்த நீர்வீழ்ச்சி உங்கள் விடுமுறையை மகிழ்ச்சியாக அனுபவிக்க தகுந்த இடமாக இருக்கிறது.