Lushgreen

அம்மாடியோவ் எப்படிங்க இந்த பெண்ணுக்கு இவ்வளவு நீளமா இருக்குது? இவங்க என்ன வேற்று கிரக வாசியா இல்ல கடவுள் அனுப்பிய தூதரா?

Jun 17 2021 03:53:00 PM

உலகில் சில விசித்திரமான மனிதர்கள் வாழ்ந்து வருவது நமக்கு அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நாம் இருக்கும் பிசியில் இதைப்பத்தியெலாம் தெரிந்து கொள்ள நேரம் எங்கு இருக்கிறது என்று சில அறிவாளிகள் கேட்பார்கள். அவர்கள் உண்மையில் சும்மாவே இருந்தாலும் பிசியாக இருப்பது போல தங்களை காட்டிக்கொள்வார்கள். இன்று நாம் பார்க்கப்போகும் அந்தப்பெண் மிகவும் வித்தியாசமானவராக இருக்கிறார்.

yu-jiyangsiya chinese-woman large-eyelash

சீனாவில் வசித்துவரும் யூ ஜியாங்சியா என்றழைக்கப்படும் அந்தப்பெண் மிக நீளமான கண் இமைகளை வளர்த்து நம்மை ஆச்சர்யப்படுத்துவதோடு கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்துள்ளார். அவரது கண் இமைகள் கிட்டத்தட்ட 8 அங்குலம் நீளமாக உள்ளது.

yu-jiyangsiya chinese-woman large-eyelash

தன்னுடைய கண் இமைகள் குறித்து கருத்து தெரிவித்த ஜியாங்சியா, புத்தர் அளித்த பரிசாக இந்த நீண்ட கண் இமைகளை கருதுகிறேன். இதனால் நான் மிகவும் மகிழ்ச்சியாக உணர்கிறேன் என்று கூறியுள்ளார். கடந்த 2016ம் ஆண்டிலேயே நீண்ட கண் இமை கொண்ட பெண் என்று இவர் ஏற்கனவே சாதனை படைத்துள்ளார். இப்போது ஐந்து ஆண்டுகள் கழித்து மீண்டும் தன்னுடைய சாதனையையே அவர் முறியடித்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்க விஷயமாகும்.

yu-jiyangsiya chinese-woman large-eyelash