Rainforest

கம்ப்யூட்டர் முன்னாடி உக்காந்து வேலை பார்த்தால் மட்டும் தான் லட்சங்களில் புரள முடியுமா? விவசாயத்தில் அதைவிட அதிகம் சம்பாதித்து உலக சாதனை கூட படைக்க முடியும் இளைஞர்களே!

May 09 2021 08:01:00 AM

படித்து முடித்து விட்டு ஏதாவது தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தால் மட்டுமே கை நிறைய பணம் சம்பாதிக்க முடியும் என்ற தவறான கருத்து மாணவ மாணவிகளிடம் இருக்கிறது. அது முற்றிலும் தவறு. விவசாயம் செய்வதினால் அதைவிட அதிகமாக சம்பாதிக்கவும் முடியும். ஏன் உலக சாதனை கூட படைக்க முடியும் என்று எத்தனை இளைஞர்களுக்கு இங்கு தெரிந்திருக்குக்கும்? விவசாயம் எப்படி உலக சாதனை ஆனது என்று இந்தப்பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

youth-agro

கொலம்பியாவின் குயாட்டா என்ற பகுதியில் வசித்து வரும் தம்பதிகள் தான் இந்த அதிசயத்தை நிகழ்த்தி காட்டியுள்ளனர். ஜெர்மன் ஆர்லாண்டோ நோவா மற்றும் ரெய்னா மரியா மரோக்யூன் இருவரும் தம்பதிகளாவர். இவர்கள் இருவரும் இணைந்து விவசாயம் செய்து வருகின்றனர். இவர்கள் தோட்டத்தில் உள்ள மாமரம் ஒன்றில் ஒரு மெகா சைஸ் மாம்பழம் அறுவடை செய்யப்பட்டுள்ளது.

youth-agro

அந்த மாம்பழத்தின் எடையை பார்த்துவிட்டு கின்னஸ் நிறுவனமே திக்கு முக்காடிப்போய் அதை சாதனையாக அங்கீகரித்துள்ளது. இவர்கள் தோட்டத்தில் விளைந்த மாம்பழம் 4.25 கிலோ எடை இருந்துள்ளது. இதற்கு முன்னர் 2009ம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட மாம்பழம் 3.435 கிலோ எடை கொண்டிருந்தது. தற்போது அதை முறியடித்து இவர்களுடைய மாம்பழம் கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.