மதுரை மாவட்ட வாக்காளர் பட்டியலை ஆட்சியர் ச.நடராஜன் வெளியிட்டார். அதில் தமிழகத்திலேயே அதிக இளம் வாக்காளர்களைக் கொண்ட தொகுதி திருப்பரங்குன்றம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது.
மேலூரில் ஆண்கள்-1,17,938, பெண்கள்-1,20,587, இதரர்- 1 மொத்தம் 2,38,526 வாக்காளர்கள் உள்ளனர்
மதுரை கிழக்கு ஆண்கள்- 1,49,477, பெண்கள்-1,53,412, இதரர்-30 மொத்தம் 3,02,919 வாக்காளர்கள் உள்ளனர்.
சோழவந்தான் (தனி) ஆண்கள்-1,04,097, பெண்கள்-1,06,133, இதரர்-6 மொத்தம் 2,10,236 வாக்காளர்கள் உள்ளனர்.
மதுரை வடக்கு ஆண்கள் -1,14,393, பெண்கள்-1,18,895, இதரர்-29 மொத்தம் 2,33,317 வாக்காளர்கள் உள்ளனர்.
மதுரை தெற்கு ஆண்கள்-1,10,290, பெண்கள்-1,12,990, இதரர்-7 மொத்தம் 2,23,287 வாக்காளர்கள் உள்ளனர்.
மதுரை மத்தியம் ஆண்கள்-1,14,696, பெண்கள்-1,19,077, இதரர்-10 என மொத்தம் 2,33,783 வாக்காளர்கள் உள்ளனர்.
மதுரை மேற்கு ஆண்கள்-1,43,527, பெண்கள்-1,45,367, இதரர்-2 மொத்தம் 2,88,896 வாக்காளர்கள் உள்ளனர்.
திருப்பரங்குன்றம் ஆண்கள்-1,49,421, பெண்கள்-1,52,111, இதரர்-25 மொத்தம் 3,01,557 வாக்காளர்கள் உள்ளனர்.
திருமங்கலம் ஆண்கள்-1,29,092, பெண்கள்-1,35,378, இதரர்-5 மொத்தம் 2,64,475 வாக்காளர்கள் உள்ளனர்.
உசிலம்பட்டி ஆண்கள்-1,35,401, பெண்கள்-1,33,914, இதரர்-8 மொத்தம் 2,69,323 வாக்காளர்கள் உள்ளனர்.
சேர்த்தல்-நீக்கம்
மாவட்டத்தில் மொத்தம் 67,436 பேர் புதிதாக சேர்க்கப் பட்டுள்ளனர். இறப்பு, இடம் பெயர்வு மற்றும் இருமுறை பதிவு காரணங்களால் 17,737 பேர் நீக்கப்பட்டுள்ளனர்.
அதிக இளம் வாக்காளர்கள்
தமிழகத்தில் அதிக இளம் வாக்காளர்களைக் கொண்ட தொகுதியாக திருப்பரங்குன்றம் தொகுதி உள்ளது. இங்கு 7,696 இளம் வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 4,189 பேர், பெண் வாக்காளர்கள் 3,507 பேர். மூன்றாம் பாலினத்தவர் யாரும் இல்லை.