இப்படிக் கூட சட்டம் போடறவங்கள என்ன செய்யறது?
  • 08:26AM Oct 04,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Anonymous
  • Written By Anonymous
  • 08:26AM Oct 04,2017 Chennai, Tamil Nadu 600003, India

கடந்த 20 வருசமா சென்னை மாநகர பேருந்து ஓட்டுநரா இருக்கறவன் நான்.  போன வாரம் கிடச்ச ஒரு சர்குலர் ரொம்பவே கடுப்படிச்சிடுச்சு… அதான் இங்க பதிவு பன்றேன்… அந்த சர்குலர்ல டயரு 15,000 விக்கறதால, ரோட்டில கல்லு, முள்ளு, ஆணின்னு எதாச்சும் கிடந்தா அதை எடுத்து ஓரமா போட்டுட்டு போகச் சொல்றாங்க… நான் வெளியூர்காரன்.  சென்னைல 20 வருஷமா பஸ் ஓட்டிட்டு இருக்கேன்.  இன்னைக்கு இருக்கிற ட்ராபிக்ல ஒரு பாயிண்ட்ல இருந்து இன்னொரு பாயிண்ட் போகவே 3 மணி நேரம் 4 மணி நேரம் ஆகுது.  இதுல நாங்க கல்லு, மண்ணு, ஆணின்னு அள்ளிப் போட்டுகிட்டிருந்தா நாள் பூரா ஓட்டினாலும் ஒரு ஸ்டேஜ் கூடத் தாண்ட முடியாது.

இந்த அறிவிப்ப கொடுத்த ஆபீசருக்கு எப்படியும் 25000-க்கு மேல சம்பளம், பச்சை இங்க்ல கையெழுத்துன்னு எல்லா வசதியும் இருக்கு… ஆனா, நடைமுறை சிக்கல், கஷ்டம் எதையாச்சும் யோசிக்காம எப்படித்தான் இப்படி ஒரு ஆர்டரை போடுறாங்கன்னு தெரியலை.  15,000 டயருக்கு கவலைபடறப்போ, நாங்க தெனமும் கட்டுற கலெக்‌ஷன் எல்லாம் என்னாவுதுன்னே தெரியலை…

காலைய இத பத்திப் பொலம்புனப்போ ஒரு தம்பிதான் சொல்லுச்சு… தேவையில்லாம நடுவுல நிறைய பேரு, அவங்க சம்பளம்னே உங்க கலெக்‌ஷன் எல்லாம் போயிடும்னு சொல்லுது… நிசமாத்தான் இருக்கும் போல… அப்போ கடைசி வரைக்கும், பஸ்சை இப்படியேதான் ஓட்டனுமான்னு கேட்டா, அந்தத் தம்பி ஸ்டாப்பிங் வந்திடுச்சுன்னு எறங்கிடுச்சு… ஒரு வகைல அந்தத் தம்பி சொல்றதும் சரியாத்தான் தோணுது.  ரெவன்யூ அது இதுன்னு எத்தனை டிபார்ட்மென்ட்… ஸ்கூல்ல 30 பஸ் 40 பஸ் ஓட்டுறாங்க, டிரைவர் கண்ட்ரோல்லயே… வண்டியும் நல்லாத்தான் இருக்கு எந்தக் குறையும் இல்லாம…

 

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top