யாழி நிஜமா???
  • 12:30PM Nov 14,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 12:30PM Nov 14,2017 Chennai, Tamil Nadu 600003, India

யாழி என்ற உயிரினம் பண்டைய காலத்தில் வாழ்ந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.  இவை யானைகளை விடப் பெரிதென்றும், யானைகள் தந்தங்களை கடித்து வெளியே இழுக்கும் வல்லமை பொருந்தியதாகவும் குறிப்பிடப்படுகிறது.  புலிகளும், சிங்கங்களும் இதனைக் கண்டு அஞ்சும் எனவும் குறிப்புகள் பல கூறப்பட்டுள்ளன.  இந்தக் குறிப்பிட்ட வகை உயிரினம் பற்றிய பல்வேறு குறிப்புகளை ஆராய்ந்து பார்த்ததில் சில நெருடல்கள் தென்பட்டன. தமிழர்களின் இலக்கணப்படி அந்த உயிரினம் லெமூரியா எனப்படும் குமரிக் கண்டத்தில் வாழ்ந்த ஒரு உயிரினம்.  அப்படி இருக்க, இந்த உயிரினத்தின் உருவத்தையோ, வடிவத்தையோ இலெமூரியா இரண்டு முறை மூழ்கிய பின்னர் தோன்றிய - ஆசியக்கண்டத்தில் இருக்கும் இப்போதைய இந்தியாவில், கைபர் போலன் கணவாய் வழியே வந்த ஆரியர்கள் கொண்டு வந்த கடவுள்களின் பாதுகாவலனாக மாறியதெப்படி???

சரி, இப்பொழுது சமீபத்தில்தான் அதுவும் 2013-ல்தான் குமரிக்கண்டம் கடலுக்கடியில் இருப்பதையே ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். (காண்க: இதே இணையத்தில் நான் எழுதிய “இலெமூரியா”) ஒரு எலும்பாவது கிடைக்கும் வரை யாழியைப் பற்றி இப்படித்தான் பேச்சு ஓடிக் கொண்டிருக்கும். தற்போது அதன் வடிவமைப்பு பற்றிச் சொல்லப்படுவதைப் பார்ப்போம். சிங்கத்தின் உருவம், பாம்பு போன்ற வால், யானை போன்ற தும்பிக்கை, கோரைப் பற்கள், பிரம்மாண்டமான உயரம். பிரம்மாண்டமான உருவம் இருந்ததற்கு சாத்தியக் கூறுகள் இருக்கிறது. டைனோசர் காலமாகவோ, டைனோசர்கள் அழிந்துவிட்டபின் மிச்சமிருந்த இனமாகவோ கூட இருக்கலாம். ஆயினும் முக அமைப்பு??? எவருக்காவது யானைக்கு ஏன் தும்பிக்கையிருக்கிறது என்று தெரியுமா???  தும்பிக்கை வலுவாக கிளைகளைப் பற்றவும், அதனை உடைத்து வாயில் வைக்கவும், தேவைப்பட்டால் கீழே உள்ள புற்களை பிடுங்கி வாயில் வைக்கவும் பயன்படும். படைப்பின் யதார்த்தம் அதுதான்.  அதே போல கோரைப்பற்கள் நேரடியாக ஒரு உடலின் மீதுள்ள சதையை கவ்வி இழுத்துக் கிழிக்கப் பயன்படுபவை.  இவையிரண்டும் ஒன்றாக இருப்பின் அது அந்த உயிரினத்திற்கு எந்தப் பயனையும் அளிக்காது.

இது மட்டுமல்லாமல் யாழியில் பல்வேறு விதங்கள் இருப்பதாகவும் சொல்கின்றனர். சிம்ம யாழி, மகர யாழி, யானை யாழி கூடவே நாய், எலி போன்ற முகத் தோற்றுமுடைய யாழிகள் இருந்ததாகவும் சொல்கின்றனர்.  ஒரே உயிரினத்திற்கு இத்தனை விதமான முகத் தோற்றம் அமைவது சாத்தியமில்லை. அதே போலத்தான் வாலும். பாம்பு போன்ற வால் நிச்சயமாகப் பாம்பைத் தவிர வேறு எதற்கும் இருந்திருக்க வழியில்லை.  நமது வாழ்க்கை முறைக்கு வால் தேவையில்லை என இயற்கையே நம்முடைய வாலை குறைத்து வெறும் குறுத்தெலும்பாக வைத்திருக்கிறதென்பது அறிவியல்.  அவ்வளவு வேகமும், பலமும் பொருந்திய மிருகத்திற்கு வழு வழு என்று பிடிக்குச் சிக்காத வால் இருந்திருக்க முடியாது.  பெரும்பாலான நாலு கால் பிராணிகளுக்கு வால் என்பது எடை வித்தியாசங்களை சமண் செய்ய மட்டுமே. 

அப்பொழுது யாழி என்ற ஒன்று இல்லையென்று சொல்லிவிடலாமா??? அப்படி இல்லை. யாழி என்று ஒன்று இருந்ததற்கான வரலாற்றுச் சான்றுகள் தமிழரின் பழங்கால நூல்களில் இருக்கின்றன. நாம் கோவில்களில் பார்க்கும் சிற்பங்களும், பின்னால் வந்த புலவர்களும் சொல்லியது - ஒரு கேட்டுப் பெற்றதை அழகாகச் சொல்லும் வித்தையே ஒழிய, உண்மையான மிருகத்தின் தோற்றம் அல்ல.  யாழி என்பது குமரிக்கண்டத்தில் வாழ்ந்த உயிரினம் என்பதற்குச் சான்றுகள் நிரம்ப இருக்கின்றன.  ஆனால், அதன் தோற்றம், பிரம்மாண்டம் தவிர்த்து எது தெரிய வேண்டுமானாலும் நாம் மீண்டும் ஒருமுறை குமரிக் கண்டத்தில் காலடி பதித்தாக வேண்டும். 

ஏனெனில் நாம் அங்கு கண்டறியப் போவது யாழிகளைப் பற்றி மட்டுமல்ல, மனிதனின் பரிணாம வளர்ச்சியைப் பற்றியும்தான்.  The missing link எனப்படும் பல்வேறு உயிரினங்கள் எவ்வாறு சம்பந்தமே இல்லாத இரு தேசங்களில் இருந்தும், அந்தத் தேசத்தின் வேறு பகுதிகளில் இல்லை போன்ற கேள்விகளுக்கான பதில்கள் அங்குதான் புதையுண்டு கிடக்கிறது. நமது கலாச்சாரமும், பண்பாடும், யாழிகளோடு சேர்த்து யாரும் கண்டுபிடித்துவிடக் கூடாதென்று நீர்சமாதியில் உறங்கிக் கொண்டிருக்கிறது. 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top