#ITjobsexpectation: ஐ.டி வேலை குறித்து மக்கள் மத்தியில் நிலவும் கற்பனையான கருத்துக்கள் ? படிக்கும் போதே சிரிப்பு வருது !
  • 15:46PM Jun 01,2019 Chennai
  • Written By AP
  • Written By AP
  • 15:46PM Jun 01,2019 Chennai

ஐடி துறையில் 10 வருடங்களுக்கு முன்னர் இருந்த சுகபோக வாழ்க்கை இப்போதும் இருக்கிறதா என்றால் இல்லை என்பதே நிதர்சனம். இருப்பினும் வெளியிலிருந்து பார்ப்போருக்கு எந்த மாதிரியான மாயத்தோற்றத்தை இந்த துறை அளிக்கிறது என்பதை பார்ப்போம்.

#1. ஐடிதுறையில் வேலையே இருக்காது என்ற பெரிய மாயத்தோற்றம் மக்கள் மத்தியில் உள்ளது... உண்மையில் ப்ராஜெக்ட் இல்லாதசமயத்தில் பெஞ்சில் இருக்கும்போது, சிலர் அவ்வாறு இருப்பார்கள்.

#2. ஆணும் பெண்ணும் ஜாலியாக பொழுதை கழிப்பார்கள் என்பது அடுத்த மாயத்தோற்றம். ஆண்களும் பெண்களும் சமமாக உழைக்கவேண்டிய துறை, ஆகையால் மக்களின் மாயத்தோற்றத்திற்கு இங்கு இடமில்லை.

#3. ஐடி என்றாலே கைநிறைய சம்பாத்தியம் என்ற மனப்பாங்கு. சம்பளம் அதிகம் என்றாலும், செலவும் சமமாக இருக்கும்.இன்றைய நாளில் நிறைய கம்பனிகள் ஆட்குறைப்பு நடவடிக்கைகளிலும் இறங்கிவிட்டது

#4. பணிபுரியும் எல்லோருக்கும் வெளிநாட்டு பயணம் என்பது படித்தவர்கள்,படிக்காதவர்கள் என எல்லோருக்கும் இருக்கும் எண்ணம்.

#5. சும்மா உட்கார்ந்து அந்த கம்பியூட்டரை பார்த்துக்கொண்டே நேரத்தை கடத்தினால், மாதத்திற்கு லட்சக்கணக்கில் சம்பளம்..

#6. அடுத்து ஆடம்பர வாழ்கை மேற்கத்திய கலாசாரத்தில் வாழ்வதாக எண்ணப்படுவது.தன் வீட்டில் இருந்து ஒருவன் ஐடிக்கு வரும் வரை அந்த தொழில் குறித்த மாய தோற்றம் விலகாது.

#7. சினிமாக்களில் காட்டப்படுவது போல ஐடி தொழிலாளர்கள் கார்களில், பார்களில் இருப்பவர்கள் ஒரு சொற்ப சதவீதமே.அடித்துபிடித்து பஸ்ஸில் ட்ரெயினில் தொத்திக்கொண்டு முண்டியடித்துக்கொண்டு செல்லும் நிலைதான் ஐடி ஊழியர்களுக்கு.. தொழில் வரி, வருமான வரி, சேவைவரி அனைத்தையும் கட்டிவிட்டு அரக்க பறக்க ஓடும் ஐடி ஊழியர்கள்.

#ITjobsexpectation: ஐடி துறையில் பணிபுரிபவர்களில் பலரது நிலைமை கவலைக்கிடமாகவே இருக்கிறது.  மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரிகள், நண்பர்களிடம் பேச நேரமில்லாமல் இருப்பது பொதுவான பிரச்சனை. பணத்தை சம்பாதிக்கத் தெரிந்தவர்களால் பிறரின் அன்பு, பாசத்தை சம்பாதிக்க முடியாமல் போய்விடுகிறது,இதன் காரணமாகவே வேலையை விட்டவர்களையும் பார்க்கலாம். கடந்த 6 வருடத்தில் தமிழ்நாட்டில் இத்துறையை சேர்ந்த 8200 பேர் தற்கொலை செய்துள்ளனர் என்ற புள்ளிவிவரம் உண்டு.30 வயதை கடந்தவர்களுக்கு நெஞ்சு வலி முதுகு வலி, 10 வருடம் வேலை செய்தவர்களுக்கு மன அழுத்தம் மற்றும் டையாபிடிஸ்.அழுத்தம் இல்லாத ஐடி ஊழியர்களை காட்ட முடியுமா ?

 

 

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top