ஈராக்கில் உலகின் முதல் Breakup Letter கண்டுபிடிப்பு!
  • 12:46PM Apr 03,2019 Iraq
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 12:46PM Apr 03,2019 Iraq

முன்பு காதலில் தோல்வி ஏற்பட்டால் பேப்பரை எடுத்துப் பக்கம்பக்கமாகக் காதல் தோல்வி கவிதைகளை எழுதுவார்கள், அதன் பிறகு காதல் தோல்வியைப் பாடல்களாகப் படத் தொடங்கினார்கள். இப்போது காதலித்த பெண்ணைக் கன்னாபின்னாவென்று திட்டி "பீப் சாங்" பாடி வருகின்றனர். ஆனால் முதன்முதலில் காதல் தோல்விக்குக் கடிதம் எழுதியது யாரென்று உங்களுக்குத் தெரியுமா?

லிபர்டி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள், கடந்தாண்டு தெற்கு ஈராக்கில் ஆராய்ச்சி செய்யும்போது உலகின் முதல் காதல் தோல்வி கடிதத்தைக் கண்டுபிடித்துள்ளனர். மரத்தினால் ஆன அந்த வரைப்பட்டிகையை ஆராய்ச்சி செய்து, அது உலகின் முதல் காதல் தோல்வி கடிதம் என்பதனை உறுதிப்படுத்தியுள்ளனர். இந்தக் கடிதமானது கி.மு. 6-ம் நூற்றாண்டில் பாபிலோனியாவை ஆண்ட இரண்டாம் பாபிலோனியப் பேரரசு நபோனிடஸ் என்பவரால் அவரது மனைவிகளில் ஒருவருக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதுவரை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்த கல்வெட்டுகளில் காதல் தோல்விக்காக எழுதப்பட்ட முதல் கல்வெட்டு இதுவாக இருக்கலாம் என்று தெரிவித்துள்ளனர்.

Image result for king nabonidus

அந்த வரைப்பட்டிகையில், "எனது குழந்தைப்பருவ நண்பரான நிபிஷாவை நீ சந்தித்தது பற்றி யூப்ரடிஸ் எனக்குத் தெரிவித்தார்கள். எனது மனைவிகளில் முக்கியமானவளான நீ, இப்படித் துரோகம் செய்வாய் என்று எதிர்பார்க்கவில்லை. இந்த மாதம் முடிவதற்குள் நீ வந்து உன் பொருட்களை எடுத்து செல்லாவிட்டால், அதை நான் நிலவு கோவிலுக்குத் தானமாகக் கொடுத்துவிடுவேன்" என்று எழுதப்பட்டிருந்தது. இதேபோல இரண்டாம் பாபிலோனியப் பேரரசுகள் எழுதிய மேலும் சில கடிதங்கள், பொருட்களைத் தேடி ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்துவருகின்றனர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top