Lushgreen

சரிதான் இந்தியாவுல கூட இவ்வளவு பெரிய கட்டிடம் இருக்குதா? இனிமே நாங்களும் கெத்தா மீசையை முறுக்கி சொல்வோம்ல!

Sep 08 2021 06:56:00 PM

அமெரிக்கா போன்ற சொகுசு நாடுகளில் வானளாவிய கட்டிடங்கள், சொகுசு விடுதிகள், ஹோட்டல்கள், கேசினோ போன்ற பொழுபோக்கு அம்சங்களை கொண்ட வர்த்தக கட்டிடங்கள் ஏராளமாக உள்ளது. இதையெல்லாம் பாக்குறப்போ நம்ம நாட்டுலயும் இந்த மாதிரி இருக்காதா என்று நம் மனசுல ஒரு எண்ணம் தோன்றும். அந்த ஏக்கத்தை பூர்த்தி செய்ய உருவாக்கப்பட்டுள்ள இடம்தான் உலக வர்த்தக பூங்கா. இது இந்தியாவின் ராஜஸ்தான் மாநிலத்தின் ஜெய்ப்பூரில் அமைந்துள்ள ஒரு வணிக வளாகமாகும். இது அதிகாரப்பூர்வமாக 2012 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் திறக்கப்பட்டது.

world-trade-park jaipur

ஜெய்ப்பூரின் உலக வர்த்தக பூங்கா கட்டுமானம் 2009 இல் தொடங்கியது. 50,000,000 அமெரிக்க டாலர்கள் செலவில் இரண்டு ஆண்டுகளில் உலக வர்த்தக பூங்கா கட்டி முடிக்கப்பட்டது. கட்டிடத்தில் வடக்கு மற்றும் தெற்கு ஆகிய இரண்டு வெவ்வேறு தொகுதிகள் உள்ளன. இது ஒரு நகர வீதியால் பிரிக்கப்பட்டுள்ளது. இரண்டு கட்டிடங்களும் ஒரு பாலத்தால் இணைக்கப்பட்டுள்ளன. அதில் பல உணவகங்கள் உள்ளன.

world-trade-park jaipur

திரு அனூப் பர்தாரியா உலக வர்த்தக பூங்கா மற்றும் குழும நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஆவார். உலக வர்த்தக பூங்கா ஜெய்ப்பூரில் பாலிவுட் நடிகர் ஷாருக் கானால் 2012 இல் திறக்கப்பட்டது.

world-trade-park jaipur

ஏகப்பட்ட சொகுசு அம்சங்கள் இந்த கட்டிடத்தில் நிறைந்து காணப்படுகிறது. அதையெல்லாம் வார்த்தைகளில் சொன்னாலும் புரியாது. புகைப்படங்களை பார்த்தாலும் புரிந்து கொள்ள முடியாது. நீங்க நேரடியாக இங்கு சென்று சில மணி நேரம் அல்லது ஒரு நாள் இருந்து பார்த்தால் மட்டுமே இதனுடைய மகத்துவத்தை உங்களால் உணர முடியும்.