Highrise

உலகின் பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பது யார் தெரியுமா? மக்கள் இவ்வளவு க ஷ்டப்படும் போதும் இவர்களுக்கு மற்றும் எங்கிருந்து பணம் வருகிறது என்றே தெரியவில்லை!

Apr 26 2021 04:09:00 PM

உலக அளவில் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியல் கடந்த சில நாட்களுக்கு முன்னர் போர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ளது. அதில் முதலிடத்தில் இருப்பவர் அமேசான் கம்பெனியின் ஓனர் ஜெப் பெஸோஸ். இவருடைய சொத்து மதிப்பு மட்டும் 177 பில்லியன் அமெரிக்கா டாலர்கள். இவருடைய வயது 57.

world richest person

இரண்டாவது இடத்தில் எலான் மஸ்க் இருக்கிறார். இவர் டெஸ்லா மோட்டார்ஸ் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். இவரின் வயது 47 மட்டுமே. இவருடைய சொத்து மதிப்பு 151 பில்லியன் அமெரிக்க டாலர்கள்.

world richest person

மூன்றாவது இடத்தில் LVMH என்ற நிறுவனத்தின் உரிமையாளர் பெர்னார்ட் அர்னால்ட் இருக்கிறார். இவர் வயது 72. சொத்து மதிப்பு 150 பில்லியன் டாலர்கள். இவருடைய குடும்பத்தில் உள்ள அனைவரும் நிறைய கம்பெனிகளை இயக்கி வருவதால் மூன்றாவது இடத்தில் இடம்பெற்றுள்ளார்.

world richest person

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் உரிமையாளரான பில் கேட்ஸ் நான்காவது இடத்தில் உள்ளார். இவருடைய வயது 65. இவருடைய சொத்து மதிப்பு 124 பில்லியன் டாலர்கள். ஐந்தாவது இடத்தில் இருப்பவர் நம்ம அண்ணாத்த மார்க் ஸுபெர்க். facebook நிறுவன முதலாளி தாங்க இவரு. facebook, வாட்சப் போன்ற நிறுவனங்களை இயக்கி வருகிறார். இவருடைய சொத்து மதிப்பு 97 பில்லியன் டாலர்கள். இவருடைய வயது வெறும் 36 தான்னா பாத்துக்கோங்க.

world richest person

என்னடா எல்லாம் வெறும் வெளிநாட்டுக்காரங்க பெயராவே இருக்குன்னு க வலைப்படாதீங்க. இந்த பட்டியலில் 10வது இடத்தில் இருப்பவர் நம்ம இந்தியா காரர். நம்ம மும்பை அணியின் ஓனர் முகேஷ் அம்பானி உலக அளவில் பணக்காரர்கள் பட்டியலில் 10வது இடத்தில் இடம்பெற்றுள்ளார்.

world richest person

இவரின் சொத்து மதிப்பு 87.5 பில்லியன் டாலர்கள். இவருக்கு வயது 63. இதில் இருந்து நாம் தெரிந்துகொள்ளக்கூடிய ஒரு விஷயம் என்னவென்றால் சொந்தமாக கம்பெனி வைத்தால் மட்டும்தான் பெரிய கோடீஸ்வரராக முடியும் என்பதே.

world richest person