இந்தியாவிலேயே ஆட்டம் பார்க்கும் 1.1 லட்சம் பேர் - ஆடிப்போகப்போகும் ஆஸ்திரேலியா..!
  • 13:17PM Jan 10,2019 Ahmedabad
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 13:17PM Jan 10,2019 Ahmedabad

your image

 

 

உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் கட்டப்பட்டு வருகிறது. மோடேராவில் ‘சர்தார் பட்டேல் மைதானம்’ என்ற பெயரில் உருவாகும் இந்த மைதானத்தின் புகைப்படம் மற்றும் சுவாரஸ்யமான விவரங்கள் வெளியாகியுள்ளது.

அவற்றின் சில தொகுப்புகள்:

கட்டுமானம் மற்றும் முக்கிய பணிகளை எல்&டி நிறுவனம் ஒப்பந்தம் செய்து கவனித்து வருகிறது.

உலகின் மிகப்பெரிய மைதானமான மெல்போர்ன் மைதானத்தை உருவாக்கிய பாப்புலஸ் நிறுவனம் மைதானத்தைக் கட்டமைக்க உள்ளது.

63 ஏக்கர் பரப்பளவில் உருவாகியுள்ள இந்த மைதானத்தில் 1.1 லட்சம் பேர் அமர்ந்து ஆட்டத்தை ரசிக்க முடியும்.மெல்போர்னில் 90,000 பேர் தான் அமர்ந்து ஆட்டத்தைப் பார்க்க முடியும்.

இந்த மைதானத்தைக் கட்டிமுடிக்க ரூ.700 கோடி செலவு ஆகும்.

4 பெவிலியன்கள், 50 அறைகள் மற்றும் 76 கார்ப்பரேட் பாக்ஸ்கள், ஒரு நீச்சல்குளம்(சர்வதேச தரம்) ஆகியவை இந்த மைதானத்தில் அமைய உள்ளன.

உள்ளரங்க கிரிக்கெட் பயிற்சி அகடாமி அமைக்கப்பட உள்ளது.

இந்த மைதானத்தில் 3000 நான்கு சக்கர வாகனங்களையும், 10,000 இரு சக்கர வாகனங்களையும் ஒரே நேரத்தில் பார்க்கிங் செய்யலாம்.

மொட்டேராவில் ஏற்கெனவே இருந்த சர்தார் பட்டேல் மைதானம் பழமையானதால் இடிக்கப்பட்டன. இடிக்கப்பட்ட மொடேரா மைதானத்தில் 54,000 பேர் மட்டுமே ஆட்டத்தை ரசிக்க முடியும்.இந்தியாவிலேயே பெரிய மைதானமான கொல்கத்தா ஈடன் கார்டன்ஸில் 68000 பார்வையாளர்கள் ஆட்டத்தை ரசிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top