நெருக்கமானவர்களுடன் வாருங்கள்.. 5D-யில் தெரியும் உச்சகட்ட ஆபாசம் - உலகை மிரள வைத்த ஒரே தியேட்டர்..!
  • 16:29PM Apr 12,2019 Netherlands
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 16:29PM Apr 12,2019 Netherlands

உச்சகட்ட ஆபாசத்தை சுற்றுலா பயணிகளுக்கு காண்பிக்க வேண்டும் என்ற நோக்கில் நெதர்லாந்து நாட்டில், அதன் தலைநகரான ஆம்ஸ்டர்டாமில் 5D தொழில்நுட்பத்தில் ஒரு தியேட்டரை உருவாக்கியுள்ளனர். இந்த நகரம் முன்னரே விலை மாதுக்களின் நகரம் என்ற பெயரை பெற்றது. இந்த நேரத்தில் அமைந்துள்ள ஆபாச திரையரங்கு மேலும் அந்நகருக்கு சுற்றுலா பயணிகளை கொண்டு சேர்த்த வண்ணம் உள்ளது. அந்நகரின் 'சிவப்பு விளக்கு பகுதி' என்று அழைக்கப்படும் 'டி லெவன்' பகுதியில் அமைந்துள்ள இந்த திரையரங்கு, கிடு கிடுவென முன்னேற்றம் கண்டு வருகிறது.

பொதுவாக 3-D தொழில்நுட்பத்தில் கட்சிகள் மட்டுமே கண் முன்னால் வந்து நிற்பது போன்று தெரியும். ஆனால் 5D தொழில்நுட்பத்தில் காட்சிகளுக்கு ஏற்ப சில பொருட்கள் அருகில் வந்து செல்லும், தண்ணீர் பீய்ச்சி அடிக்கப்படும். திகில் காட்சிகள் வந்தால் இருக்கைகள் கூட நகரும். திரில்லர் படங்களுக்கு பயன்படுத்தலாம் என்று உருவாக்கப்பட்ட இந்த நுட்பத்தை, முதன் முதலாக ஆபாச படத்திற்கு பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது தான் இதன் சிறப்பம்சமாகும். ஒரு காட்சிக்கு அதிகபட்சமாக 18 பேர் மட்டுமே ஒன்றாக அமர்ந்து திரைப்படம் காண முடியும். அதற்கு ஏற்ற வகையில் திரையரங்கின் வடிவமைப்பு அமைந்துள்ளது.

இது குறித்து பேசிய திரையரங்கின் உரிமையாளர், இதை ஆபாச திரையரங்கு என்பதை தாண்டி, ஒரு பொழுதுபோக்கு இடமாக பாருங்கள். இந்த திரையரங்கு சுற்றுலா பயணிகளுக்கு மட்டுமல்லாது, நெதர்லாந்து மக்களுக்கும் பிடிக்கும். இந்நாட்டு மக்கள் சமூக பார்வையையும், விதிமுறைகளையும் உடைத்தெறிய விரும்புகிறார்கள். உங்களுக்கு நெருக்கமானவர்களோடு வந்து திரைப்படம் பாருங்கள். ரசித்து மகிழுங்கள் என்று கூறியுள்ளார். 5D திரைப்படங்கள் எடுக்க அதிக பொருட்செலவு ஆகும் என்பதால், படிப்படியாக ஆபாச காட்சிகளை 5D தரத்தில்  உருவாக்கி வருகின்றனர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top