சுற்றுலா வந்த பாவத்துக்கு, சும்மா இருந்திருக்கலாம் போல! பதறியடித்து ஓடிய பெல்ஜியம் பெண்!
  • 12:54PM Feb 06,2019 Delhi
  • Written By vignesh babu
  • Written By vignesh babu
  • 12:54PM Feb 06,2019 Delhi

டிசம்பர் மாதம் இந்தியாவுக்குச் சுற்றுலா வந்த பெண்ணை திட்டம் போட்டு ஏமாற்றப் பார்த்த டெல்லி வாலிபர்களால், அந்தப் பெண் அன்றே அலறியடித்து பெல்ஜியத்திற்கு பறந்த கதை இப்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பெல்ஜியத்தை சேர்ந்த Esther Deleu என்ற அந்தப் பெண் கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவில் சுற்றுலா மேற்கொள்வதற்காக டெல்லிக்கு வந்துள்ளார். டெல்லி சுற்றுவட்டத்தில் இருந்த ஒரு ஹோட்டலில் தங்குவதற்கு புக் செய்திருந்த எஸ்தர், அவரது உடைமைகளை அங்கு வைத்துவிட்டு சிம் வாங்குவதற்காகச் சென்றுள்ளார். பிறகு அங்குப் பக்கத்தில் இருந்த ஆட்டோவை பிடித்து மிண்டோ சாலை வழியாகத் தான் புக் செய்த ஹோட்டலுக்கு சென்றுகொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத இருவர், காவலர்கள் என்று கூறி அந்த ஆட்டோவை வழிமறித்துள்ளனர். அந்த வெளிநாட்டுப் பெண்ணிடம், அந்த சாலைவழியில் கலவரம் நடப்பதால், பக்கத்தில் உள்ள காவல் மையத்திற்குச் செல்லுமாறு கூறியுள்ளனர், அந்த மையத்தின் விலாசத்தையும் கொடுத்துள்ளனர்.

Image result for women travelling alone in india

ஒன்றும் புரியாத அந்த வெளிநாட்டுப் பெண் ஆட்டோ ஓட்டுனரை அந்தக் காவல் மையத்திற்குப் போகச்சொல்லியுள்ளார். அவர்கள் அந்த இடத்திற்குச் சென்றதும், போலீஸ் உடை அணிந்த 6 பேர் எஸ்தரிடம், அவர்கள் சென்றுகொண்டிருந்த பகுதியில் கலவரம் நடப்பது போல ஒரு வீடியோவை காண்பித்துள்ளனர். மேலும் அவர் புக் செய்த ஹோட்டல் இவரது புக்கிங்கை கான்செல் செய்ததாகவும் கூறி நம்பவைத்துவிட்டனர். எஸ்தரின் சிம் ஆக்டிவேட் ஆகாததால், ஹோட்டலுக்கு போன் செய்யமுடியவில்லை. இதனால் பதற்றமடைந்த எஸ்தர் என்ன செய்வதென்று தெரியாமல் நின்றார். அப்போது அவர்களே டெல்லியின் மத்திய பகுதியில் இருந்த ஒரு பயண நிறுவனத்தின் போன் நம்பரை எஸ்தரிடம் கொடுத்து ரூம் புக் செய்துகொள்ளுமாறு கூறியுள்ளனர். வேறுவழி இல்லாத நிலையில் எஸ்தர் அவர்களைத் தொடர்பு கொண்டு பேசியுள்ளார், அந்தப் பயணம் நிறுவனம் 5 ரூம்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளனர், ஆனால் அனைத்து ரூம்களின் விலையும் அதிகமாக இருந்துள்ளது. அதன் பிறகு எஸ்தர் எப்படியோ பேசி 40 டாலருக்கு ஒரு ரூமை புக் செய்துவிட்டார். அங்கிருந்து கிளம்பிய எஸ்தர் நீண்ட பயணத்துக்கு பிறகு அவர் புக் செய்த ஹோட்டலுக்கு சென்றார். அங்குச் சென்று பார்த்ததும் அவருக்கு பெரும் ஏமாற்றம்!

Related image

அவருக்குக் கொடுத்த ரூமில் இன்டர்நெட் வசதிகூட இல்லை. வெறும் ஜன்னலே இல்லாத இருட்டான குட்டி ரூம்! தலையில் கைவைத்து எஸ்தர் உட்கார்ந்த போது திடீரென அவரது ரூமை சிலர் பலமுறை தட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன எஸ்தர் ரிஷிகேஷில் உள்ள அவரது நண்பர் ஒருவரைத் தொடர்பு கொண்டு நடந்த சம்பவத்தை பற்றிக் கூறியுள்ளார். அந்த நண்பர், எஸ்தர் முன்பு புக் செய்த ஹோட்டலுக்கு தொடர்பு கொண்டு பேசியபோது அவர்கள் எஸ்தரின் புக்கிங்கை கான்செல் செய்யவில்லை என்று கூறியுள்ளனர். எஸ்தருக்கு நடந்த அனைத்தையும் அந்த ஹோட்டல் நிர்வாகிகளுக்குத் தெரிவித்தபிறகு, அந்த ஹோட்டல் மேனேஜர் எஸ்தர் இருக்கும் ஹோட்டலுக்கு விரைந்து சென்று அவரை மீட்டுள்ளார். அவர்கள் ஹோட்டல் திரும்பியதும் பொட்டியை பேக் செய்து பெல்ஜியம் நாட்டிற்குக் கிளம்பிவிட்டார். இந்தப் பயங்கர சம்பவத்தில் இருந்து மீண்டுவந்த எஸ்தர் பெல்ஜிய தூதரகத்துக்கும், வெளியுறவு அமைச்சகத்துக்கும் ஒரு புகார் கடிதம் அனுப்பியுள்ளார். இந்தப் புகாரை ஏற்றுக்கொண்ட டெல்லி காவல் துறையினர் தற்போது அந்த குற்றவாளிகளை பிடிக்க விசாரணையை தொடங்கியுள்ளனர்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top