Misc

#Introvert: கூச்ச சுபாவம் கொண்ட ஆண்களை பெண்களுக்கு பிடிக்குமா? நல்லா கிளப்பி விட்ருக்காங்க!

Sep 18 2020 07:24:49 AM

பசங்கனா மாஸ் காட்டணும், பைக்ல வீலிங் விடணும், ஜிம் பாடி இருக்கனும் இதெல்லாம் இருந்தா தான் பொண்ணுகளுக்கு பிடிக்கும் என்று சொல்லி ஒரு குரூப் கிளம்பி இருக்கு. அப்போ கூச்ச சுபாவம் உள்ள பசங்க, எங்க போறது சொல்லுங்க. கவலையே வேண்டாம், உங்களுக்காகவும் ஒரு சில டைப் பெண்கள் காத்துகிட்டு இருக்காங்க பாஸ்.

Introvert Reserved men

ஆண்களின் வெட்கம், கூச்சமெல்லாம் தனி அழகாக பார்ப்பார்கள் சில பெண்கள். அதை ரசிப்பார்கள். கூச்ச சுபாவம் உடைய ஆண்களிடம், பெண்கள் கொஞ்சம் டாமினேட்டிவ்வாக இருப்பார்கள். அவங்களை ரொம்ப பாதுகாப்பா பாத்துப்பாங்க. மற்ற பெண்களிடம் மணிக்கணக்கில் பேசும் ஆண்களை விட, யாரையும் தொந்தரவு செய்யாமல் அமைதியாக இருக்கும் ஆண்களையே பல பெண்களுக்கு பிடிக்குமாம்.

Introvert Reserved men

"எப்பொழுதும் மறைத்து வைப்பதற்கு ஒரு தனி அழகு உண்டு" என்று கவிதை நடையில் சொல்வார்கள். காதல், உணர்வு, வெட்கம் என்று ஆண்கள் இதை செய்யும் பொழுது கூடுதல் அழகாகத் தான் இருக்கும். கூச்ச சுபாவத்தை மாற்ற முடியாத ஆண்கள், தங்களின் "கூச்ச சுபாவம்" குறித்து கவலையே கொள்ள தேவையில்லை. உங்களுக்காகவும் சில பெண்கள் காத்திருக்கிறார்கள் என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

Introvert Reserved men

இதையெல்லாம் தாண்டி, கூச்ச சுபாவம் கொண்ட ஆண்களிடம் தவறான விசயங்கள் மிகக்குறைவாக இருக்கும் எனப் பெண்கள் நம்புவார்கள். தாங்களாகவே விரும்பி முன்வந்து பழகுவார்கள். இந்த மாதிரியான ஆண்களால் தனக்கு பாதிப்பு எதுவும் வராது என்ற நம்பிக்கை இருக்கும். "பெண்மையில் பேராண்மை, ஆண்மையில் ஓர் பெண்மை" என்றைக்கும் அழகு தான். என்ஜாய் மக்களே!