#Billionaires 30 வயதுக்குள் 30 தலைமுறைகள் வாழ சொத்து சேர்த்த அழகிகள்!
  • 17:18PM Jul 16,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 17:18PM Jul 16,2019 Chennai

நமது நாட்டுப் பெற்றோர்கள் வீட்டில் உள்ள பெண் பிள்ளைகளை 22 வயது கடந்ததும் எப்படித் திருமணம் செய்து வைக்கலாம், யாருக்குத் திருமணம் செய்து தரலாம் என்று யோசிப்பார்கள். அந்தப் பெண் பிள்ளைகளுக்குப் பெற்றோர் விருப்பத்திற்கு அடங்கி யாரென்று தெரியாதவருடன் பழகி திருமணம் செய்துகொள்கின்றனர். இங்கு இப்படி இருக்கும் போது மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் இளம் வயதில் தங்கள் திறமையை வளர்த்துக்கொள்வது மட்டுமின்றித் தங்களின் எதிர்காலத்துக்கு வேண்டிய அனைத்து தேவையையும் பூர்த்திச் செய்துகொள்கின்றனர். அப்படித் தங்களது 30 வயதுக்குள் 30 தலைமுறைகள் வாழும் அளவுக்குச் சொத்து சேர்த்த இளம் பெண்களைப் பற்றி இங்குப் பார்ப்போம்.

 

#1 Alexandra Andresen - 22 வயதே ஆகும் Alexandra Andresen நார்வே நாட்டின் பிரபல முதலீடு நிறுவனமான Ferd நிறுவனத்தின் உரிமையாளர்களில் ஒருவராவார். இந்த நிறுவனத்தில் 42 சதவீத பங்குகளுக்குச் சொந்தக்காரரான இவரின் சொத்துமதிப்பு 140 கோடி டாலராகும். இதுமட்டுமின்றி Alexandra Andresen மூன்றுமுறை நார்வே குதிரை சவாரி போட்டியின் ஜூனியர் பிரிவில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளார். Most Eligible Bachelor பட்டியலிலும் இவர் இடம்பிடித்துள்ளார். இவர் கடந்த 2016-ம் ஆண்டு World's Youngest Billionaire என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

#2 Katharina Andresen - 24 வயதாகும் Katharina Andresen, Alexandra Andresen-ன் சகோதரியவர். Ferd நிறுவனத்தின் உரிமையாளர்களில் Katharina Andresen-ம் ஒருவராவார். இவரும் Alexandra Andresen-க்கு நிகராக Ferd நிறுவனத்தின் பங்குகளில் 42 சதவீதத்தை வைத்துள்ளார். இவரின் சொத்துமதிப்பும் Alexandra Andresen போல 140 கோடி டாலர் சொத்துள்ளது, ஆனால் 32,000 டாலர் மட்டும் குறைவு. இதற்குக் காரணம் 2017-ம் ஆண்டுப் போதையில் வாகனம் ஒட்டி சென்றத்துக்கு நோர்வே காவல் துறையினர் அபராதம் விதித்துள்ளனர். 2019-ம் ஆண்டுக்கான World's Third-Youngest Billionaire என்ற பட்டத்தை Katharina Andresen பெற்றுள்ளார்.

#3 Anna Kasprzak - 29 வயதாகும் Anna Kasprzak டென்மார்க் நாட்டின் பிரபல ஷூ தயாரிப்பு நிறுவனமான ECCO-ன் உரிமையாளர்களில் ஒருவராவார். இது Anna-வின் குடும்பத்துக்குச் சொந்தமான நிறுவனமாக இருந்தாலும் இவரது பங்குமட்டும் 100 கோடி டாலராகும். World's Top Billionaire பட்டியலில் Anna Kasprzak 2057-வது இடத்தில் உள்ளார். இதுமட்டுமின்றி ஒலிம்பிக் போட்டியில் இருமுறை டென்மார்க் நாட்டின் சார்பாகக் குதிரை சவாரி போட்டியில் கலந்துகொண்டுள்ளார்.

#4 kylie jenner - 21 வயதான kylie jenner தான், தற்போது Worlds Youngest Self-made Billionaire ஆக உள்ளார். Kylie Cosmetics நிறுவனத்தின் மூலம் கடந்தாண்டு மட்டும் 360 மில்லியன் டாலர் லாபம் சம்மதித்துள்ளார். இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தைச் சுமார் 15 கோடி பேர் பின்பற்றுகின்றனர். திருமணமாகாத இவர் தற்போது தனது காதலருடன் லிவ் இன்னில் வாழ்ந்து ஒரு குழந்தையே பெற்றுக் கொண்டார்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top