17 வயது சிறுவனை வெறி தீர்த்த 23 வயது பெண் - 3 குழந்தையை தொடர்ந்து அடுத்த டார்கெட்.!
  • 15:38PM Dec 06,2018 Chennai
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 15:38PM Dec 06,2018 Chennai

your image

 

சென்னையை சேர்ந்த சுவேதா என்ற பெண் 17 வயது சிறுவனை அழைத்துச்சென்ற விவகாரத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 23 வயதாகும் சுவேதா சென்னை கீழ்பாக்கம் அருகே வசித்து வருகிறார். இவருக்கு இரண்டு திருமணம் நடந்துள்ளது. முதல் கணவர் மூலமாக ஒரு குழந்தையும், இரண்டாவது கணவர் மூலமாக இரண்டு குழந்தைகளும் பிறந்துள்ளது. இருந்தாலும் வேட்கை தணியாத இவர் சிறுவன் மீதும் காதல் கொண்டு தன் வலையில் வீழ்த்தியுள்ளார்.

சுவேதாவின் உறவினருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பார்த்துக்கொள்ள மருத்துவமனைக்கு சென்ற அவர், அடுத்த பெட்டில் இருந்த 17 வயது சிறுவனுடன் பேச்சு கொடுத்துள்ளார். இந்த பழக்கம் சில நாட்கள் நீடித்தது.

மருத்துவமனையில் இருந்து வெளியேறிய பின்னரும் சிறுவனுடன் நட்பை தொடர்ந்துள்ளார். ஒருகட்டத்தில் நட்பு காதலாக மாறி தனக்கு இரண்டு திருமணம் நடந்ததை கூட சிறுவனிடம் சொல்லாமல், அவனுடன் வீட்டைவிட்டு வெளியேறி இருக்கிறார். சிறுவன் காணாமல் போனதை தொடர்ந்து பெற்றோர்கள் காவல் துறையினரிடத்தில் புகார் அளித்தனர்.

அதே நேரத்தில் சுவேதாவும் காணாமல் போனதை அறிந்து விசாரணை நடத்தியதில், இருவரும் சேர்ந்தே வெளியேறியது காவல் துறையினருக்கு தெரிய வந்தது. இதனை தொடர்ந்து சுவேதாவை போக்சோ சட்டத்தின் கீழ் காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இரண்டு திருமணம் ஆகி, மூன்று குழந்தை இருக்கும் நிலையில் இப்படி போகலாமா என்று அறிவுரை கூறியதற்கு, சிறுவனுடன் தான் செல்வேன் என்று அடம் பிடித்துள்ளார். எனவே சிறுவனுக்கு 17 வயது தான் ஆவதால், சுவேதாவை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். 18 வயதுக்கு கீழ் உள்ள பருவத்தினர் எந்த பாலினமாக இருந்தாலும், அவர்கள் பாலியல் ரீதியாகவோ, அல்லது அதற்கு முயற்சி செய்யும் நோக்கிலோ குற்றசம்பவங்கள் நடந்தால் அவர்களை காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து வருகின்றனர். சுவேதாவின் கைது நடவடிக்கையும் அச்சட்டத்தின்படியே மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Share This Story

முருகானந்தம்

Top