#SIA வால்மார்ட் கடையின் வாடிக்கையாளர்களுக்குப் பேரதிர்ச்சி ஏற்படுத்திய பாப் பாடகி!
  • 17:55PM Jun 01,2020 California
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 17:55PM Jun 01,2020 California

வெளிநாடுகளில் திரையுலகப் பிரபலங்கள் தங்கள் ரசிகர்களை மகிழ்விக்கும் வகையில் ரசிகர்களின் அலுவலகம் அல்லது அவர்களின் இல்லத்திற்கு நேரடியாகச் சென்று வியப்பை ஏற்படுத்துவார்கள். அந்த வகையில் பிரபல பாப் நடிகை ஒருவர் வால்மார்ட் கடையின் வாடிக்கையாளர்களுக்கு ஒரு பேரதிர்ச்சியைக் கொடுத்துள்ளார். காலிஃபோர்னியாவின் Palm Springs நகரத்தில் உள்ள வால்மார்ட் கடையில் எப்போதும் போல வாடிக்கையாளர்களின் நடமாட்டம் அதிகமாக இருந்தது. அப்போது பில்லிங் கவுண்டர் அருகே ஒரு அடையாளம் தெரியாத பெண் வந்துள்ளார். பில் போடுவதற்காக அங்கு அனைவரும் காத்திருந்தபோது இந்தப் பெண், தனக்கு லாட்டரி அடித்துள்ளதாகவும், அப்போது கடைக்கு வந்த அனைவரின் பில்லையும் தான் காட்டுவதாகக் கூறியுள்ளார். கடைக்கு வந்த வாடிக்கையாளர்கள் அனைவரும் தங்களுக்கு வேண்டிய பொருட்கள் அனைத்தையும் வாங்கிக்கொண்டனர்.

#TabraizShamsi நம்ம கண்ணை நம்மளாலேயே நம்பமுடியலயே...மைதானத்தில் மேஜிசியனாக மாறிய கிரிக்கெட் வீரர்!

Woman pays strangers' grocery bills. Turns out it was Cheap Thrills singer Sia 

அந்தப் பெண்ணும் எந்தக் கவலையுமின்றி அனைவரின் பில்லையும் காட்டினார். இதனிடையே வாடிக்கையாளர் ஒருவர் அந்தப் பெண் யார் என்பதைக் கண்டுபிடித்து உரக்க கத்தியுள்ளார். அப்போது தான் வாடிக்கையார்கள் அனைவர்க்கும் தங்களின் பில்லை காட்டியது பிரபல பாப் பாடகி Sia என்பதே தெரியவந்தது. Sia-வை பார்த்ததும் நடிகையர்கள் அனைவரும் சந்தோஷத்தில் முழுகினர். தற்போது Sia கொடுத்த இந்தப் பேரதிர்ச்சி வீடியோ இணையம் முழுக்க வைரலாகப் பரவி வருகிறது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top