#RelationshipGoals: இந்த விஷயத்தையெல்லாம் சரியா செய்தால் போதும் உங்க மனைவியை எளிதாகச் சந்தோசப்படுத்தலாம்..!
  • 13:08PM Jun 19,2019 Chennai
  • Written By Kenny seb
  • Written By Kenny seb
  • 13:08PM Jun 19,2019 Chennai

20 வருஷத்துக்கு முன்னாடி இருந்த காதலுக்கும் இப்போ இருக்கக் காதலுக்கும் 1000 வித்யாசங்கள் இருக்கும்.அப்போதெல்லாம் இருவருக்கும் சண்டை வந்தால் சமாளிக்க எதாவது Gift கொடுப்பாங்க.ஆனால் இப்பொழுதெல்லாம் சண்டை போட்டால் யார் முதலில் Sorry கேட்கிறார்கள் என்ற ஈகோ முளைத்துவிடும்.இதையெல்லாம் ஓரம் கட்டிவிட்டு இப்பொழுது இருக்கும் பெண்களைச் சந்தோஷ படுத்த இந்த விஷயங்களையெல்லாம் செஞ்ச போதும்..!

Image result for Couples happy

#1. பெண்களுக்கு அதிகம் இருக்கும் ஒரே எதிர்பார்ப்பு,கணவன் தன்னைக் கவனிக்கிறார் என்ற எதிர்பார்ப்பு அவர்களுக்கு இருக்கும்.இதற்காக ஆண்கள் பெரிதாக ஏதும் செய்ய வேண்டாம் காலையில் ஒருமுறை அவர்களை Wish பண்ணுவது. இது போன்ற சின்னச் சின்ன விஷயங்களையெல்லாம் செய்தால் போதும்.

#2.  வேலை செய்யும் எலலோருமே எதிர்பார்க்கும் ஒரு விஷயம் பாராட்டுகளைத் தான்.இது மனைவிகளுக்குப் பொருந்தும்.மனைவி செய்யும் சிறு விஷயங்களையும் கணவன் பாராட்டினாலே போதும் அவர்களைச் சந்தோஷப்படுத்த.

#3. பெண்கள் ஆண்களிடம் அதிகக் கேள்விகளைக் கேட்பதற்கு முக்கியமான காரணம் கணவன் மீதான சந்தேகத்தில் இல்லை.கணவன் எதாவது தவறு செய்து விடுவாரோ என்ற பயத்தில் தான் அவர்களை நோண்டி நோண்டி கேள்வி கேட்கிறார்கள்.இதை சரி செய்ய மனைவியிடம் கணவன் எப்பொழுதுமே உண்மையாக இருந்தாலே போதும்,இதை விட அவர்களுக்குப் பெரிதாக எதுவும் தேவையில்லை.

#4. மன்னிப்பு,இதை கேட்பதற்கு கல்யாணம் ஆன எல்லாருக்குமே இருக்கும் ஈகோ தான்.திருமணம் ஆவதற்கு முன்பு அவர்கள் பல முறை மன்னிப்புக் கேட்டிருப்பார்கள்,ஆனால் திருமணத்திற்குப் பின் மன்னிப்பு என்ற வார்த்தைக்கே அங்கு இடமில்லை.ஆண்களுக்கே ஆன ஈகோவை உடைத்தெறிந்து மன்னிப்பு கேட்டாலே போதும் அவர்கள் அடையும் மகிழ்ச்சியைச் சொல்ல வார்த்தையில்லை.

#5. திருமணத்திற்குப் பிறகு உங்கள் உறவை அடிக்கடி சில இன்ப அதிர்ச்சிகளைக் கொடுக்கப் பழகிக்கொள்ளுங்கள்.இது போன்ற விஷயங்கள் தான் உங்களின் உறவை மெருகேற்றும்.

உறவில் நீங்கள் நீண்ட நாட்கள் சந்தோஷமாக இருக்க வேண்டுமென்றால் இது மாதிரியான சிறு சிறு விஷயங்களையெல்லாம் செய்தாலே போதும்.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top