#PSBLOANMELA: அனைத்து PSB-களிலும் நான்கு நாளைக்கு LOAN MELA!!! உடனடி வங்கிக் கடன் திட்டம்!!!
  • 18:43PM Oct 04,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 18:43PM Oct 04,2019 Chennai

பொருளாதார சரிவு இந்தியா முழுவதும் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நேரத்தில் எதைச் செய்தால் இது சீராகும் என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. எத்தனையோ விதமாக முயற்சி செய்தும் வாடிக்கையாளர்களின் வாங்கும் திறனை அதிகரிக்க முடியவில்லை. இதைச் சரி செய்ய PSU வங்கிகளை இணைக்க நடந்த முயற்சிக்கும் வங்கிகள் தரப்பில் பெரிய எதிர்ப்பு எழுந்ததையடுத்து, அதையும் நிறைவேற்ற முடியவில்லை. இதையடுத்து, புரட்சிகரமாக யோசிப்பதாக எண்ணிக் கொண்டு, PSU BANK LOAN MELA நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதன்படி, இந்தியா முழுவதும் 250 மாவட்டங்களில் இன்று முதல் 4 நாட்களுக்குப் பொதுமக்களுக்கு உடனடி BANK LOAN வழங்கும் திட்டம் தொடங்கியுள்ளது.

பண்டிகை காலங்களில் BANK-களில் உடனடி LOAN வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சமீபத்தில் அறிவித்திருந்தார். இதனையடுத்து நடைபெற்ற PUBLIC SECTOR BANK-களின் ஆண்டு செயல்பாடு பற்றிய REVIEW MEETING-ல், OCTOBER 3 முதல் நான்கு நாட்களுக்கு, நாடு முழுவதும் உடனடியாக LOAN வழங்குவது என முடிவு செய்யப்பட்டது. அதன்படி, STATE BANK OF INDIA, PUNJAB NATIONAL BANK, BANK OF BARODA, CORPORATION BANK உள்பட அனைத்து PUBLIC SECTOR மற்றும் PRIVATE BANK-களும் இன்று முதல் நான்கு நாட்களுக்கு உடனடி LOAN-களை வழங்க உள்ளன. இந்த திட்டத்தின் மூலம் சில்லறை வர்த்தகம், விவசாயம், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள், வீடு மற்றும் வாகனம் வாங்குவதற்கான கடன் கல்விக்கடன், தனிநபர் கடன் ஆகியவை உடனடியாக வழங்கப்பட உள்ளன.

ஆனால், நாம் ஏற்கெனவே குறிப்பிட்ட படி கடன் வழங்குவது பிரச்சினையல்ல. யாருக்கு வழங்குகிறோம் என்பதுதான் பிரச்சினையே. பெரும்பாலான மக்களுடையக் கடன் வாங்கும் தகுதியைச் சட்டத்தால், நீக்கிவிட்டு, மேலும் மேலும், கடன் வாங்கும் தகுதியுள்ளவர்களுக்குக் கடன் வழங்குவதால், எந்த முன்னேற்றமும் ஏற்படப் போவதில்லை. 20,000 ரூபாய் வருமானமில்லாமல் எந்த வங்கியும் கடன் தருவதில்லை. இன்றைய நிலையில், இந்தியாவில் 60% மக்கள் அதிகபட்சம் 15,000 ரூபாய் தாண்டாத சம்பளக்காரர்களாகத்தான் இருக்கிறார்கள். அவர்களின் ஒட்டுமொத்தக் கடன் வாங்கும் தகுதியை காலி செய்துவிட்டு, கடன் வாங்கும் தகுதியுள்ளவர்கள் என்று வங்கிகள் கருதுபவர்களை மீண்டும் மீண்டும் கடன்காரர்கள் ஆக்குவது, வங்கிகளுக்கும் நல்லதல்ல, கடன் வாங்குபவர்களுக்கும் நல்லதல்ல, பொருளாதாரத்திற்கும் நல்லதல்ல. புரிந்தால் சரி!!!

Student Loan Schemes  |  Bank Job  |  Economic Offense  |  Bank Merger  |  ATM Shocker  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top