#Animals : இதென்ன சாதாரண விஷயம்னு நெனச்சுட்டீங்களா.? ஒரு நாள் நமக்கே ஆப்படிக்க போகுது - ஷாக்கிங் டேட்டா.!
  • 15:01PM Jun 19,2019 India
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 15:01PM Jun 19,2019 India

சிறுத்தைகள் இருப்பதுவன ஆரோக்கியத்தின் குறியீடு என்று விலங்கியல் நிபுணர்கள் கூறுகின்றனர். சிறுத்தைகள் வனத்தின் நல்வாழ்வைக் கண்முன் காட்டும் ஒரு கருவியாகும். இப்போது வனங்கள் அழிந்து வருவதால், சிறுத்தைகள் உணவுத் தேவைக்காக காட்டைவிட்டு வெளியே வருகின்றன. இதனால் மனித-சிறுத்தை மோதல்கள் ஆங்காங்கே நிகழ்கின்றன. நடப்பு 2019ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் மட்டும் இந்தியாவில் 218 சிறுத்தைப் புலிகள் இறந்துள்ளன. கடந்த ஆண்டு 500 சிறுத்தைகள் இறந்திருக்கின்றன. அதனுடன் ஒப்பிடும்போது, இந்த ஆண்டின் சிறுத்தைகள் இறப்பு 40 சதவிகிதம் அதிகமாக இருக்கிறது.

வனவிலங்கு பாதுகாப்புச் சங்கம் என்ற லாப நோக்கற்ற அமைப்பு 2009ம் ஆண்டிலிருந்து சிறுத்தைகள் குறித்து கணக்கெடுத்து வருகிறது. அதன்படி, இந்த வருடம்தான் அதிகமாக சிறுத்தைப் புலிகள் இறப்பைச் சந்தித்திருக்கின்றன. இந்தியாவில் குறைந்தபட்சம் ஒரு சிறுத்தை, ஒவ்வொரு நாளும் கிணறுகளில் சிக்கியோ, அடித்தோ, வாகனங்களில் அடிபட்டோ இறந்திருக்கிறது. இது கவலைப்பட வேண்டிய ஒன்றாகும். சிறுத்தைகளின் இறப்புக்கு நம்பகமான அரசாங்க தகவல் இல்லை. இறந்த சிறுத்தைகளில் 16 சதவிகிதம், ரயில் மற்றும் சாலைகளில் அடிப்பட்டும், வேட்டையாடப்பட்டும் இறந் தவை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2014ம் ஆண்டு 41, 2015ம் ஆண்டு 51, 2016ல் 51, 2017ல் 63, 2018ம் ஆண்டு 80 என்ற எண்ணிக்கையில் ரயில் மற்றும் சாலைகளில் சிறுத்தைப் புலிகள் இறந்துள்ளன.

உள்கட்டமைப்பு திட்டங்களும் சிறுத்தை இனம் அழிவை நோக்கி செல்ல காரணம். வளரும் நாட்டுக்கு உள்கட்டமைப்பு திட்டங்கள் மிக முக்கியமானவை தான். ஆனால் சிறுத்தைகள், வனங்களைப் பாதுகாக்க, அதன் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் முறையான திட்டங்கள் தேவைப்படுகின்றன. கிராமப்புற பகுதிகளை அடையும் முறையற்ற நவீனத்துவமும் வன விலங்குகளின் பாதுகாப்பில் சிக்கலை ஏற்படுத்துகிறது.
மின்சாரத்தால் இறக்கும் சிறுத்தைகளின் எண் ணிக்கையும் அதிகரித்துள்ளன. 2017ம் ஆண்டில் 0.9 சதவிகிதம், 2018-ல் 1.2 சதவிகிதமாக இருந்த மின்சாரம் தாக்கி இறந்த சிறுத்தைகளின் விகிதம், நடப்பாண்டின் முதல் நான்கு மாதங்களில் 2.3 சதவிகிதமாக அதிகரித் துள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.விளை நிலங்களை வனவிலங்குகள் நாசம் செய்யா மல் இருக்கப் பலரும் மின் வேலி அமைப்பதால், அதில் சிக்கி விலங்குகள் அதிகமாக உயிரிழக்கின்றன. இந்த விஷயங்கள் பெரும்பாலும் வெளியில் தெரிவதில்லை.

மின் வழித்தடங்கள், ரயில்வே பாதைகள் மற்றும் சாலைகளால் வனப்பகுதிகள் துண்டாடப்படுவதால், உணவு தேடி சிறுத்தைகள் மனிதர்கள் வசிக்கும் இடத் துக்கு வருகின்றன. இதையடுத்து நடக்கும் மனித மோதல்களால் இறக்கும் சிறுத்தைகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது. 2014-ல் 27, 2015-ம் ஆண்டில் 33, 2016-ல் 31, 2017-ல் 28 மற்றும் 2018-ம் ஆண்டில் 35 என்ற விகிதத்தில் இருந்த மனிதன் சிறுத்தை இடையிலான மோதல்களின் எண்ணிக்கை 2019ம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களிலேயே 18 என்ற எண்ணிக்கையை தொட்டிருப்பது கவலையளிப்பதாக இருக்கிறது.

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top