Timeless

பொண்டாட்டியை தூக்கிக்கிட்டு ஓட வேண்டுமா? அவுங்கள விட்டுட்டு ஓடுறதுனா கூட பரவாயில்லை! எதுக்குங்க தூக்கிக் கிட்டு ஓடணும்?

Sep 21 2021 11:41:00 AM

நம் நாட்டில் உள்ள கணவன் மனைவிகளுக்கும் வெளிநாட்டிலுள்ள கணவன் மனைவிகளுக்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளது. அதற்கான காரணங்கள் நாட்டுக்கு நாடு வேறுபடும். இப்போ அது நமக்கு தேவையில்லை. பொண்டாட்டியை மனசுல சுமக்கிறேன் என்று சில பேர் சொல்லுவாங்க. அந்த மாதிரி பேசுறவங்கள இந்த போட்டிக்கு அனுப்பி வைச்சா அவுங்களோட உண்மையான வலிமையை தெரிந்து கொள்ளலாம்.

wife-carrying championship-match

நீங்க மனசுல சுமக்க வேணாம். நிஜத்துல சுமந்து பாருங்க என்று சொல்கிறது பின்லாந்து. என்ன சொல்றேன்னு புரியலையா? பின்லாந்துல ஒரு வினோதமான போட்டி வருடந்தோறும் நடத்தப்படுகிறது. இந்த போட்டியில கணவன் மனைவியாக வாழும் இருவர் கலந்து கொள்ள வேண்டும். போட்டி என்னவென்றால் கணவன் தன்னுடைய மனைவியை தூக்கிக்கொண்டு ஓட வேண்டும்.

wife-carrying championship-match

ஒரு குறிப்பிட்ட தூரத்தை மனைவியை சுமந்தபடி நீங்கள் கடக்க வேண்டும். இதெல்லாம் ஒரு விளையாட்டா என்று நினைக்காதீங்க இந்திய கணவர்களே. இதுல ஜெயிக்கிறவங்களுக்கு கிடைக்கிற பரிசு எவ்வளவு என்று தெரிந்தால் நீங்க ஷாக் ஆயிடுவீங்க. போட்டியில் வெல்லும் கணவருக்கு அவருடைய மனைவியின் எடைக்கு ஈடான அளவு பியரும், மனைவியின் எடையை விட ஐந்து மடங்கு எடைக்கு ஈடான பணமும் பரிசாக கொடுக்கப்படும்.

wife-carrying championship-match

இப்படி ஒரு பரிசு கிடைக்கிறது என்பதற்காக இப்பவே உங்க பொண்டாட்டிய தூக்கிட்டு ஓட வேண்டாம். ஒவ்வொரு வருடமும் ஜூலை மாதம் பின்லாந்தில் இந்த போட்டி நடைபெறும். பின்லாந்து மட்டுமல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளிலும் இந்த விளையாட்டு தற்போது பிரபலம் அடைந்து வருகிறது.

wife-carrying championship-match

நீங்க ஒரு விஷயத்தை மறந்துவிடக்கூடாது. பரிசு பெருசா இருக்கிறதே என்று நினைத்து போட்டிக்கு தயாராகக்கூடாது. உங்க மனைவியை உங்களால் தூக்க முடியுமா? அவுங்களோட எடை எவ்வளவு என்பதையெல்லாம் முதலில் தெரிஞ்சுக்கோங்க. அது தெரியாம போட்டியில கலந்துக்கிட்டா அப்புறம் உங்களோட மனையுடன் சேர்த்து உங்களையும் ஆம்புலன்ஸ் தான் தூக்கிக் கிட்டு போகும்.