#AVENGERSENDGAME: படத்தின் இறுதியில் எல்லாக் கற்களையும் வைத்த பிறகும், ஏன் முதலில் நடந்தவை, பழையபடி நடக்கவில்லை தெரியுமா???
  • 12:36PM Apr 27,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 12:36PM Apr 27,2019 Chennai

பொதுவாக SCI—FI படங்கள் என்றாலே, ஒன்று இந்த WIRE-ஐ அங்கே மாட்டு, இதை இப்படிச் சொருகு, அந்த SWITCH-ஐ ON பண்ணு, நம்ம வெற்றிகரமாக இதைத் தயார் செஞ்சிட்டோம் என்ற RANGE-க்கு இருக்கும். இல்லையென்றால், கிட்டத்தட்ட பத்துத் தடவை பார்த்த பிறகுதான் அதைப் புரிந்து கொள்ள முடியும் என்ற வகையில் அதில் SCIENCE இருக்கும். MATRIX, INTERSTELLAR, INCEPTION போன்ற படங்கள் புரியாத ஆட்கள் இன்னும் நிறையப் பேர் இருக்கத்தான் செய்கிறார்கள். இரண்டு மூன்று முறை பார்த்தும், சிலரிடம் கருத்துக் கேட்டும் புரிந்து கொண்டவர்கள் நிறைய. அப்படிப்பட்டவர்களுக்குத்தான் இந்தப் பதிவு.

வழக்கமாக TIME TRAVEL படங்களில் சொல்லப்படுவது போல, ஒரு பொருளை எடுத்த இடத்திலேயே வைத்து விட்டால், அதனால், பிற்காலத்தில் ஏற்பட்ட மாற்றங்கள் முதலில் இருந்த நிலைக்குச் சென்று விட வேண்டும். ஆனால், THANOS-ஐ அழித்த பிறகு, அனைத்துக் கற்களையும் அந்த இடத்தில் திருப்பி வைத்த பிறகும் ஏன் மீண்டும் “AVENGERS INFINITY WAR”-ல் நடந்த சம்பவங்கள் நடக்கவில்லை என்று யாராவது ஒருத்தருக்குத் தோன்றி இருக்கலாம். எனக்கும் தோன்றியது. அந்தத் தேடலுக்கான விடைதான் இது. கூடுமானவரை SPOILER இல்லாமல் இதை விளக்க முயற்சி செய்கிறேன்.

முதலில், THANOS எதையும் துவங்கும் முன்பு இருந்த காலகட்டத்திலேயே அழிக்கப்பட்டது ஒன்று. அதனால் எல்லாக் கற்களையும் தேடி வர அவன் இல்லை. இரண்டாவது, நிகழ்காலத்தில் STARK-க்கு ஏற்பட்ட நிலை. SO, இரண்டு PARALLEL UNIVERSE-கள் சேர்ந்து நிகழ்ந்த நிகழ்வு, மீண்டும் அதே போன்ற ஒரு நிலை ஏற்பட்டால் மட்டுமே நடக்கும். ஆனால், அதற்கு வாய்ப்பேயில்லை. மூன்றாவது, BALANCE OF THE UNIVERSE. அதாவது ஒரு SUPER POWER உருவாகிறதென்றால், அதற்கு நேர் எதிரான மற்றொரு SUPER POWER வேறெங்கோ உருவாகியிருக்கிறது என்று அர்த்தம். இது இயற்கையின் நீதி.

அப்படித்தான் முதலில் உருவான AVENGER-ஆன CAPTAIN AMERICA, கற்களை வைத்த கையோடு MARGARET-ஐத் தேடிப் போன போதே, அவரது EXISTENCE தடம் மாறிவிட்டது. இதனால், இயற்கை தன்னுடைய சமநிலை தக்க வைத்துக் கொள்ள அதற்குப் பெரிய எதிர்மறை சக்தி தேவையில்லாமல் போய்விட்டது. அதாவது, கற்கள் திரும்ப வைக்கப்பட்டாலும், அப்போதைய நிகழ்காலம் மாற்றியமைக்கப்பட்டதால், மீண்டும் முன்பு நடந்ததைப் போல ஒரு எதிர்காலம் நடக்கவே வாய்ப்பில்லாமல் போனது. CHAOS THEORY-ப்படி அதற்கேற்றவாறு சம்பவங்கள் மாறியதன் விளைவு இது. அவ்வளவுதான். இதைப் படித்துவிட்டுப் படம் பார்த்தால் உங்களுக்குத் தெளிவாக அவர்கள் எத்தனை SCIENCE-ஐ கொடுத்திருக்கிறார்கள் என்று உங்களுக்கே புரியும். சிறப்பான இந்த முயற்சிக்குப் பாராட்டுகள்!!!  

Making of a Movie  |  Movies & Critics  |  Evergreen Best Intro Songs  |  Terrific Villains of Kollywood  |  Best of Tamil Cinema  |

Top