#Mobile Camera: ஒரு கேமரா இருந்தாலே போதுமே! இப்ப வர செல்போன்ல எதுக்கு 4 கேமரா இருக்கு.? உங்களுக்கு நல்லா தெரிஞ்ச கான்செப்ட்!
  • 22:05PM Oct 26,2019 India
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 22:05PM Oct 26,2019 India

முன்ன எல்லாம் கேமரா செல்போனை பார்ப்பதே அதிசயம். அதிலும் பின்னாடி கருப்பு புள்ளி மாதிரி இருக்க கேமரா கண்ணுக்கு தெரிந்தால், விலை அதிகமான போன் போல என்ற எண்ணம் பலருக்கு வரும். ஒரு கேமரா வைத்த செல்போன் பார்ப்பதே அரிது என்று இருந்த நிலை மாறி, ஒரே செல்போனில் 4 கேமரா இருக்கும் அளவுக்கு நிலை மாறிவிட்டது.

 இப்போது ஒரு கேள்வி நம் மனதுக்குள் எழ கூடும். ஒரு கேமராவில் படம் எடுத்தாலே தெளிவாக வருமே. ஏன் தேவை இல்லாமல் ஒன்றுக்கும் மேற்பட்ட கேமராக்கள்.? என்று நினைக்கலாம். எல்லாத்துக்கும் ஒரு காரணம் உண்டு. நமக்கும் தான் ஒரு கண்ணில் பார்த்தாலே பார்வை தெளிவாக தெரியும். ஆனால் எதற்கு இரண்டு கண்கள் இருக்கிறது.? அது போல தான்.

இரண்டு கண்களும் சேர்ந்த பார்வை தான். மூளைக்கு பல நுணுக்கமான சமிக்கைகளை கொடுக்கும். அது போல ஒரு நுட்பம் தான், செல்போன் கேமராவிலும் உள்ளது. நமக்கு எப்படி இரண்டு கண்களின் மூலம் இருவேறு காட்சிகளைப் பெற்று, அவற்றை இணைத்து அலசி, நம் மூளை ஒரு முப்பரிமான தோற்றத்தை உணர்கிறதோ அதே கான்செப்ட் தான்.

இதனை depth perception என்பார்கள். அருகில் இருக்கும் பொருளையும் தொலைவில் இருக்கும் பொருளையும் நம்மால் வேறுபடுத்திக் காண முடிவது அதனால் தான். ஒன்றுக்கு மேற்பட்ட கேமரா இருந்தால் படமெடுக்கையில் எது முன்னணியில் இருக்கிறது, எது பின்னணியில் இருக்கிறது என்பதை செல்போன் சென்சார் அறிந்துகொண்டு அதற்கேற்ப படத்தைப் பதிவு செய்து நல்ல தரமான துல்லியமான ஒரு படத்தைத் தர இயலும். | Internet இந்த ஆண்டு உங்கள் இன்டெர்நெட் வேகம் எவ்வளவு அதிகரித்திருக்கிறது தெரியுமா?

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top