#Election Result : பேஸ்புக் லைக் எல்லாம் ஓட்டாக மாறினால்..? அப்ப கூட வாய்பில்ல ராசா - விளாசி தள்ளும் நெட்டிசன்கள்.!
  • 16:53PM May 23,2019 India
  • Written By முருகானந்தம்
  • Written By முருகானந்தம்
  • 16:53PM May 23,2019 India

சீமான் போன்றவர்களுக்கு சமூக வலைத்தளங்களில் நல்ல ஆதரவு இருக்கிறது. ஆனால் அவை ஏன் வாக்காக மாறவில்லை என்று பலரும் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதில் இருந்து சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்புவதை காண முடிகிறது. கடந்த 2017 ஆம் ஆண்டு செப்டம்பர் மாத கணக்குப்படி இந்தியவின் மக்கள் தொகை 1,342,512,706 என்கிறது விக்கிபீடியா தளம். கடந்த தேர்தலில் இந்திய வாக்காளர்கள் எண்ணிக்கை 81.4 கோடிகளாக இருந்துள்ளது. இதுவே கடந்த ஆண்டு நிலவரப்படி தமிழக வாக்காளர்கள் எண்ணிக்கை 5.86 கோடிகள் என்கிறது தேர்தல் ஆணையம். இதில் சமூக வலைத்தளங்கள் பயன் படுத்துவோர் எண்ணிக்கை வாக்காளர்களில் பத்து சதவீதம் முதல் 15 சதவீதம் மட்டுமே.

சமூக வலைத்தளங்களில் இருப்போர் பெரும்பாலும் நன்கு படித்த இளைஞர்களாக தான் உள்ளனர். ஆனால் அவர்கள் மாத்திரமே இந்த சமுதாயம் என்று கூறிவிட முடியாது. இன்னும் பல பெரியர்வர்கள் இருக்கிறார்கள். ஏன் இதுவரை திராவிட கட்சிகளுக்கு ஓட்டு போடுகிறோம் என்று தெரியாமலேயே போட்டுக்கொண்டு இருப்பவர்கள் கூட இருக்கிறார்கள். அவ்வளவு எளிதில் மாற்றத்தை விரும்பாத ஒரு சமுதாயமாக நமது  தமிழ் சமுதாயம் இருப்பதையே இது காட்டுகிறது.

அடுத்தது திராவிட கட்சிகளின் சதியும் நீண்ட காலமாக இதில் பெரும் பங்காற்றுகிறது. அவர்கள் இதுவரை அரசியலில் சம்பாரித்த  பணத்தைக்கொண்டு வாக்குகளை விலைக்கு வாங்குகிறார்கள். கைநீட்டி காசு வாங்கிவிட்டால், அதனை கொடுத்தவர்களுக்கு மறக்காமல் வாக்கு போடும் நியாய உணர்வு நன்றி உணர்வு மிக்கவர்கள் தமிழர்கள். அதனாலேயே எத்தனை தில்லு-முல்லு தொடர்ச்சியாக குற்றபின்னணி கொண்டவர்களை மட்டுமே தேர்ந்தெடுக்கும் குணம் நம்மவர்களிடத்தில் காணப்படுகிறது.

தற்போதைய தேர்தலில் மாற்று கட்சியாக நினைப்பவர்கள் வெல்லமாட்டார்கள் என்பது அவர்களுக்கே தெரியும். ஆனால் ஏன் போட்டியிடுகிறார்கள் என்றால் தங்களை களத்தில் இறக்குவதன் மூலம் பெருவாரியான மக்களிடம் அறிமுகமாக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் தான். அதற்காக தான் சிறிய கட்சியாக இருந்தாலும், அனைத்து தொகுதியிலும் போட்டியிடுகின்றனர். இதுவே ஒரு பத்தாண்டுகள் கழித்து பெரிய கட்சிகளை பார்த்தால் தலைவர்களே இல்லாமல் இருக்கும். வாரிசுகள் தலைமை பதவியில் இருப்பார்கள். அந்த நேரத்தில் களம் காணும் போதுமக்களிடம் பரிட்சையமானவர்களாக இருக்கலாம் என்ற நோக்கில் தான் களம் காண்கின்றனர். சமூக வலைத்தளத்தில் இருக்கும் ஆதரவுக்கும், வாக்குக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.

Share This Story

முருகானந்தம்

Top