Misc

#west faced: மேற்கு பார்த்த வீட்டில் ஏன் பலரும் குடியேறத் தயங்குகின்றனர்? சும்மாவா சொல்லி வச்சாங்க! மலைக்க வைக்கும் காரணம்!

Sep 16 2020 11:08:27 AM

வீட்டுக்கு பக்கத்தில் உள்ள இடம், பிளாட் போட்டு சைட் விற்பனை பிரமாதமாக சென்று கொண்டிருந்தது. எல்லாம் விற்று முடித்த பின், கார்னரில் இருந்த இரண்டு வீடுகளை மட்டும், யாருமே வாங்க முன்வரவில்லை. சைட் ஓனர், கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்பதால், வாஸ்து, சம்பிரதாயம் எதையும் கண்டுகொள்ளவில்லை. இரண்டுக்கும் உள்ள தொடர்பு புரிந்த பின்னர் தான், தெளிவாக விளங்கியது. அந்த இரண்டு வீடுகள் மேற்கு நோக்கி கட்டப்பட்டிருக்கிறது. மேஸ்திரி வேண்டாம் என்று சொல்லியும், ஓனருக்கு உடன்பாடில்லை. அவருக்கு பிடித்தது போல கட்டியுள்ளார். அதன் விளைவாகவே யாரும் வாங்க முன்வரவில்லை.

house vasthu-plan west-faced-home

பொதுவாக கிழக்குவாசல் பார்த்த வீடு என்றால் எல்லா ராசிக்கார்களுக்கும் பொருந்தும் இதில் சாஸ்திரம் பார்க்க தேவையில்லை. ஆனால் மேற்கு பார்த்த வீடு தவிர்க்கப்படுவதற்கு பின்னால், ஒரு சில காரணங்கள் உண்டு. பொதுவாக கிழக்கு, வடக்கு, தெற்கு பார்த்த வீடுகளை மட்டுமே மக்கள் விரும்புகின்றனர். மேற்கு பார்த்த வாசல் வீட்டை யாரும் விரும்புவதில்லை. காரணம் அந்தக் காலத்தில் மின் வசதி கிடையாது. வீடுகள் பெரும்பாலும் குடிசை வீடுகளாக இருந்தது.

house vasthu-plan west-faced-home

வெளிச்சத்திற்கு எண்ணெய் விளக்குகள் தான் வீட்டு வாசலில் இருக்கும். ஆடி மாதம் போன்ற அதிக காற்று வீசும் காலங்களில், மேற்கு பார்த்த வீடுகளில் தீப்பிடிக்க வாய்ப்புகள் அதிகம். அதனாலேயே மேற்கு வாசல் வீடுகள் தவிர்க்கப்பட்டன. அன்று தொடங்கிய பழக்கம் இன்று வரை அப்படியே தொடர்கிறது. அது போக, மேற்கு பார்த்த வீட்டில், வெளிச்சம் போதிய அளவுக்கு இருக்காது. சூரியன் உதிக்கும் திசையில் வீடு இருக்க வேண்டும் என்பதையே பலரும் விரும்புகின்றனர்.

house vasthu-plan west-faced-home

கோவை மண்டலத்தை பொறுத்த வரைக்கும், பலரும் விரும்புவது கிழக்கு பார்த்த வீடுகளாக மட்டுமே இருக்கும். அடுத்து தெற்கு நோக்கிய வீட்டில் காற்று நன்றாக வரும் என்பதால், சோழ மண்டல மக்கள் தெற்கு நோக்கிய வீட்டையே பெரிதும் விரும்புகிறார்கள். இந்த அறை, இந்த இடத்தில் தான் இருக்க வேண்டும் என்பதற்கு கூட, ஒரு சில அறிவியல் காரணத்தை வைத்தே வாஸ்துப்படி வீட்டை கட்டுகின்றனர். எந்த திசை பார்த்த வீடாக இருந்தாலும், வாஸ்து படி அமைத்தால் அனைத்து வளங்களும் பெற்று சிறப்புடன் வாழலாம்.