வயசானவங்க ஏன் யூத்தைப் பார்த்தா சிடுசிடுங்கறாங்க தெரியுமா?
  • 06:31AM Nov 01,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By Anonymous
  • Written By Anonymous
  • 06:31AM Nov 01,2017 Chennai, Tamil Nadu 600003, India

       இப்பல்லாம் காலம் ஓடறதே தெரியலை… நேத்து குச்சி மிட்டாய்க்கு தங்கச்சி கூடச் சண்டை போட்ட மாதிரி இருக்கு… இன்னைக்கு பையன் அதே மாதிரி சண்டைப் போடுறதை பார்த்துட்டு இருக்கோம்.  நாம ஆசை ஆசையா வாங்குன சட்டையைப் பையனுக்கு குடுத்தா, இதெல்லாம் 90ஸ் ஸ்டைல்பாங்கிறான்.  நமக்கு ஞாபகம் இருக்கு, இதே சட்டையப் போட்டுட்டு பஸ் ஸ்டாண்ட்ல ஹீரோ மாதிரி அலப்பறை பண்ணினதும், பொண்ணுங்க நம்மளுக்கு குடுத்த ரியாக்‌ஷனும்.  என்னதான் பையனாயிருந்தாலும், அவ்வளவு பேவரைட் ஆன சட்டையை அவன் கூசாம கழுவி ஊத்தும்போது காண்டாவாதா என்ன??? எத்தனை பிகருங்க, எத்தனை லுக்குங்க… இவனுக்கெல்லாம் என்ன தெரியும்?

       சரி, அப்படி என்னடா ஸ்டைல்னு போய் பார்த்தா, எல்லாம் கிழிஞ்சதும் கேவலமானதுமாவே இருக்கு… பேன்ட்ல அழுக்குன்னு தொவைக்க சொன்னா, என்னவோ சொத்தையே எழுதிக் கேட்டா மாதிரி முறைப்பான் பாருங்க… தூங்கி எந்திருச்சு தலை வாராம வெளியே போனா எம் மவன் பிரெண்ட் எம்மவன்கிட்ட, “என்னடா உங்க டாடி யூத்தா மாறிட்டாரு” -ன்னு கேக்குறான்.  நாம கூட ஏதோ மறுபடி பத்து வருஷம் குறைஞ்சிடுச்சோன்னு உள்ள போய் கண்ணாடியைப் பார்த்தா அப்படியொன்னும் தெரியலை.  வெளிய வந்து மறுபடி அவனை உத்துப் பார்த்தப்போ அவனும் என்னைக் கவனிச்சுட்டு சொல்றான், “நைஸ் ஹேர் ஸ்டைல் அங்கிள், நான் கூட ஈவனிங் போய் 500 ரூபீஸ் குடுத்து செட் பண்ணிக்க போறேன்” ங்கறான்.  அப்போத்தான் நான் தூங்கி எந்திருச்சு வந்ததே எனக்கு ஞாபகம் வந்துச்சு. 

       இதெல்லாம் கூடப் பெரிய மேட்டர் இல்லை.  என் ப்ரெண்ட் வீட்டுக்குப் போனப்போ அவனோட பெண் குழந்தைக்கு சாக்லேட், பொம்மை வாங்கிட்டுப் போனா, அவன் அவ கல்யாணப் பத்திரிகையை நீட்டுனா, அவ்ளோ வயசாச்சா நமக்குன்னு மெர்சலாகும் பாருங்க… அவன் காலேஜ் முடிக்கிறதுக்கு முன்னாடி கூட்டிட்டு ஓடிப் போய் கல்யாணம் பண்ணியிருந்தாலும், நேத்தைக்கு கண்ணத்தைக் கிள்ளி விளையாடி கடைக்கு இடுப்புல தூக்கி வச்சுகிட்டு போய் மிட்டாய் வாங்கிக் குடுத்த பொண்ணுக்கு இன்னைக்கு கல்யாணம்னு பத்திரிகை குடுக்கிறது என்ன நியாயம்னு கேட்கிறேன்???  முந்தா நேத்து நம்ம பங்காளி பையனை மார்க்கெட்ல பார்த்து என்ன பண்றேன்னு கேட்டா, பையனுக்கு காதணி விழான்னு பத்திரிகையை நீட்டுறான். 

       இப்படி துன்பப்பட்டு, கஷ்டப்பட்டு, வெட்கப்பட்டு, வேதனைப்பட்டு தப்பித் தவறி யாராச்சும் நம்மள யூத்னு பீல் பண்ணிப் பார்த்தாலோ பேசினாலோ, அதுக்குன்னே சுத்திட்டிருந்தவங்க மாதிரி வருவானுக பாருங்க அங்கிள்னு கூப்பிட்டுட்டு, அப்பல்லாம்… தூங்கி எந்திருச்ச மாதிரித்தான் இருக்கு, ஆனா அதுக்குள்ள வயசாயிடுச்சுன்னா எப்படி நம்ப முடியும்? இதுல வேணும்னே சில வயசான கிழடுங்க நம்மளை அண்ணான்னு வேற கூப்பிட்டு அதுக யூத்தாக ட்ரை பண்ணும், யூத்தோ ப்ரோன்னு சொன்னா கெட்ட வார்த்தைல கூடக் கூப்பிடுங்கன்னு நேரடியாகவே சொல்றாங்க… இப்படி எங்க யூத்தைப் பார்த்தாலுமே நம்ம மனசுல வயசாயிடுச்சோன்னு நினைப்பு ஓடிட்டே இருந்தா, நீங்களே சொல்லுங்க – யூத்தைப் பார்த்தா எப்படி காண்டாகாம இருக்கிறது??? 

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top