#LOVEFIGHTS: தம்பதியருக்குள் சண்டை வருவது இயற்கையா??? எதற்காக என்று தெரியுமா???
  • 19:10PM Oct 28,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 19:10PM Oct 28,2019 Chennai

பழங்காலத்தில் ஊடல் என்ற வார்த்தை இருக்கும். அதற்கு அர்த்தம் காதலுடன் கூடிய சண்டை. POSSESSIVENESS, UNDERSTANDING என்று பல்வேறு காரணங்களால் ஏற்படும் இந்தப் பிணக்கு இல்லாமல் போனால், என்னவாகியிருக்கும்??? கடவுளோ, இயற்கையோ, எதற்காகச் சண்டை போடும் குணத்தை மக்களிடையே, குறிப்பாகக் காலம் முழுவதும் சேர்ந்து வாழும் தம்பதியர்களுக்குள் வருவது போல DESIGN செய்திருக்கிறது??? அப்படிச் செய்திருந்தால், எதற்காக இப்படி ஒரு DESIGN என்று தெரிந்து கொள்வோமா??? உண்மையில் ஒரு மகத்தான காரியத்திற்காகத்தான் இப்படி உருவாக்கப்பட்டிருக்கிறது என்று நம்புபவர்களில் நானும் ஒருவன். காரணம் இதோ!!!

#1. சரியான தேர்வுக்கு முதலில் தேவை புரிந்து கொள்ளுதல். சின்னச்சின்ன சண்டைகள் இதற்கான வாய்ப்புகளை அதிகப்படுத்தும்.

#2. ஒருவரின் உண்மையான குணம் தெரிய வருவது, அவர் கோபப்படும் போதுதான். தம்பதி ஆகும் முன்பு இது அவர் தேவையா இல்லையா என்று முடிவெடுக்க உதவும்.

#3. பிரிவைப் போல மிகப் பெரிய இணைக்கும் சக்தி வேறெதுவும் இல்லை. இதற்கும் அடிப்படையாக இருப்பது இது போன்ற ஊடல்தான்.

#4. உங்கள் காதலருக்கு உங்கள் மேல் எத்தனை காதல் இருக்கிறது என்பதை அறிந்து கொள்ள ஊடலை விட்டால் வேறு சிறந்த வழியே இல்லை.

#5. ஒருவேளை நிஜமான காதல் இல்லாமல் இருந்தால், ஊடல் அப்படியே பிரிவாக விடும். ஒருவேளை அப்படிப் பிரிந்தால் கடந்து போகப் பழகிக் கொள்ளுங்கள்.

#6. காரம், உறைப்பு ஏதும் இல்லாத சமையலையே சாப்பிட முடியாத போது, வாழ்க்கையை எப்படி ஒரே மாதிரி வாழ முடியும். சந்தோஷமே திகட்டிவிடும் அல்லவா???

#7. சின்னச்சின்ன வெற்றிகள்தான் நம் வாழ்க்கையை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. அந்த வெற்றிகளுக்காகவாவது சின்னச்சின்ன சண்டைகள் அவசியமாகிறது.

#8. வேறு சில பயனுள்ள இணைப்புகள்:  |  Nobel Prize Couples  |  Strong Relationship  |  Newly Wed Facts  |  Public Love Proposal  |  Unknown Love  |

#LOVEFIGHTS அடுத்த முறை காதலர்களுக்குள்ளோ, தம்பதியருக்குள்ளே சண்டை வந்தால், அது உங்கள் நடுவே இருக்கும் புரிதலையும், அன்னியோன்யத்தையும் அதிகப்படுத்தவே என்று புரிந்து கொள்ளுங்கள். அது மட்டும் புரிந்தால் போதும், வாழ்க்கையே இன்பமாகிவிடும். தேவையில்லாத EGO-வால் எதையும் பாழாக்கிக் கொண்டிருக்க மாட்டீர்கள். மாட்டீர்கள்தானே!!!

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top