Misc

யாராவது அருகில் நிற்கும் போது வாயிலிருந்து குப்பு குப்புன்னு துர்நாற்றம் வருகிறதா? முகம் சுளிக்க வேண்டாம், இது அந்த அறிகுறியாக இருக்கலாம்னு சொல்றாங்க!

Oct 23 2020 12:20:29 PM

காலையில் பல் துலக்கி அரை மணி நேரம் தான் இருக்கும், அப்பாகிட்ட பேச அருகில் சென்றால் வாய் துர்நாற்றம் அடிக்கிறது என்கிறார். இவ்வளவு நாள் இல்லாமல், இந்த ஒரு வாரமாகத்தான், இப்படி சொல்லிக் கேட்கிறேன். நல்லா தேய்த்தும் பல் துலக்கி பாத்தாச்சு, ஆனால் நாற்றம் குறைந்தபாடில்லை. வெளியில் போன இடத்தில், யாராவது முன்னாடி நின்று பேச வேண்டும் என்றாலே, சங்கடமா இருக்கு. எங்காவது முகம் சுளித்து விடுவார்களோன்னு ஒரு தயக்கம். பார்க்கிற வரைக்கும் பார்த்தேன், ஒன்னும் புரியல. நேரா பல் டாக்டரிடமே போயிட்டேன்.

smell tongue mouth

எல்லா சோதனையும் செய்து பார்த்த பிறகு, பல்லிலும், ஈறுகளிலும் எந்த குறையும் இல்லையென்று சொல்லிவிட்டார். பிறகு ஏன் டாக்டர் நாற்றம் வருதுன்னு கேட்டேன். வயிற்றில் கோளாறு இருந்தாலும், வாய் காட்டிக்கொடுத்து விடுமாம். இது பெரிய பிரச்சனை என்று நினைத்து பயப்பட எல்லாம் தேவையே இல்லையாம். அல்சர் மாதிரி வயிற்று கோளாறு இருந்தால், வாய் துர்நாற்றம் வருவது சகஜம் தான். மணத்தக்காளி கீரையை வாரத்தில் மூன்று முறை உணவில் சேர்த்திருந்தால், எல்லாம் சரியா போயிருன்னு, ஆங்கில மருத்துவம் படித்த டாக்டர் சொல்லும் போது, மனதுக்கு நிறைவா இருந்துச்சு.

smell tongue mouth

இதுக்கும் மாத்திரை எழுதி கொடுத்து, மருந்து கணக்கு காட்ட சில நூறு தண்டம் வைப்பாருன்னு நினைச்சேன். நல்ல மனுஷன் கன்சல்டிங் பீஸ் மட்டும் வாங்கினாரு. இன்னொன்னு, தண்ணீர் சரியா குடிக்காவிட்டாலும் வாய் துர்நாற்றம் வரும். வெறும் வாயில் மற்றும் துர் நாற்றாமென்றால் தினமும் இரு முறை பல் துலக்கினால் போதும். அப்படியும் நாற்றம் தொடருகிறாதென்றால் உங்கள் குடலை சுத்தம் செய்ய வேண்டும். வாய் துர் நாற்றம் வெறும் பல் சம்பந்த பட்டது இல்லை. அதிகமாக வயிறு சம்பந்தபட்டது.தண்ணீர் வெகு குறைவாக குடிப்பவர்களுக்கு கூட வாய் துர்நாற்றம் வர வாய்ப்பு உள்ளது.

smell tongue mouth

வாய் துர்நாற்றத்துக்கு செரிமான கோளாறு முக்கியமான காரணமாக விளங்குகிறது. வயிறு சரியாக இருந்தால் வாய் துர்நாற்றம் இருக்காது. அஜீரணம் ஆகக்கூடிய உணவை தவிர்க்கவும். நார்ச்சத்து மிகுந்த காய்கறிகளை அதிகமாக சாப்பிடலாம். புளி, காரம், காபி மற்றும் பொரித்த உணவுகளை முடிந்த வரையில் குறைத்துக்கொண்டால் நல்லது. சரியான வேளையில் உணவினை எடுத்துக்கொள்வதால், வயிறு குழப்பமடையாமல் உணவை செரிக்கும். இதெல்லாம் செய்ய கஷ்டமா தான் இருக்கும். பழைய படி நல்லா வாய்திறந்து பேசவேண்டும் என்றால், செஞ்சு தான் ஆகணும். எனக்கு சரியான அனுபவத்தில் சொல்றேன்.