#THIRDLANGUAGE: மூன்றாவது மொழி என்பது ஹிந்தி என்று ஏன் சொல்கிறார்கள்!!! உண்மை இதுதான்???
  • 16:27PM Sep 20,2019 Chennai
  • Written By KV
  • Written By KV
  • 16:27PM Sep 20,2019 Chennai

ஒரு பக்கம் மும்மொழிக் கொள்கை என்று ஆழம் பார்த்துக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. அது ஹிந்திதான் என்பது கட்டாயமில்லை என்கிறது மாநில அரசு. வலுக்கட்டாயமாக ஹிந்தியைத் திணிக்கிறார்கள் என்று சொல்கிறது எதிர்க்கட்சிகள். இவர்களில் யார் சொல்வது உண்மை??? மூன்றாவது மொழி என்றாலே ஹிந்தி என்று நினைப்பது சரியா என்று ஒரு சிறிய பார்வை. உண்மையைச் சொல்லப் போனால், அனைவருமே உண்மையைத்தான் சொல்கிறார்கள், அவரவர்கள் பாணியில். ஆனால், நடக்கப் போவதை அதிகத் தெளிவாகச் சொல்வது எதிர்க்கட்சிகள் என்று சொல்லலாம். ஏன் அப்படி என்று பார்க்கலாம்.

முதலில், ஹிந்தியைத் தவிர வேறு OPTION எது??? OPTION என்று சொன்னால், மற்ற மொழிகளுக்குப் பள்ளிக்குக் குறைந்தபட்சம் ஒரு ஆசிரியராவது இருக்க வேண்டும். அப்படிப் பார்த்தால், 20 மொழிகளைக் கற்றுக் கொடுக்க OPTION-கள் தேவைப்பட்டால், குறைந்தபட்சம் 20 ஆசிரியர் நியமனம் நடந்தாக வேண்டும். இது தேவையில்லாத செலவு என்பதை விட, ஹிந்திக்குத்தான் ஆள் இருக்கிறது, மற்ற மொழிகளுக்குத் தேடிக் கொண்டிருக்கிறோம் என்று சொன்னால், கேள்வி கேட்கக் கூட முடியாது. அப்படி, எந்த OPTION-ஐயும் கொடுக்காமலேயே ஒரே OPTION மட்டும் கொடுத்து, இதில் எதை வேண்டுமானாலும் தேர்ந்தெடுக்கலாம் என்று சொன்னால் எப்படி???

இரண்டாவது, சமஸ்கிருதத்திற்கு எழுத்து வடிவம் கிடையாது என்பதால், ஹிந்தியைத்தான் பயன்படுத்தி வருகிறார்கள். இதனாலேயே ஹிந்தியின் மீது, அதை அனைத்து இடங்களிலும் கொண்டு சேர்ப்பதில் மத்திய அரசு முனைப்பாக இருக்கிறது. ஆனால், அதற்கு முன்பு ஒரே ஒரு முறை அரசு ஆவணக் குறிப்பேடுகளில் தேடியிருந்தால், இந்திய மாநிலங்களில் அதிகம் பேர் PRIVATE ஆக ஹிந்தி படிப்பவர்களில் தமிழர்கள்தான் அதிகம் என்று தெரிந்து கொண்டிருப்பார்கள். ஆக, பள்ளியில் அனைத்து வகுப்பிலும் படித்தே ஆக வேண்டும் என்ற நிலை தமிழ்நாட்டில் பெரும்பாலானோருக்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். இந்தக் காரணங்களுக்காகவே, ஹிந்தியைத் திணிப்பதை எதிர்க்கட்சிகள் கூட்டாக எதிர்த்துக் கொண்டிருக்கிறார்கள். என்ன செய்யப் போகிறது அரசு???

National Educational Policy  |  Loksabha Oath in Tamil  |  Stop Hindi Imposition  |  TN Against Imposition  |  Hindi Imposition - Economic Fraud  |

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top