Shoreline

#Ceiling Fans: ஒரு பட்டனை தட்டினால் ஹீட்டராக மாறும் சீலிங் ஃபேன் - இது எப்படி சாத்தியம்? வாங்க ஓட விடுவோம்!

Oct 23 2019 02:42:00 PM

நாம் பார்க்கும் பெரும்பாலான ஃபேன்கள் counter-clockwise திசையில் சுற்றும். அதாவது இடஞ்சுழியாக சுற்றும் போது ஃபேன்க்கு மேல் இருக்கும் குளிர் காற்றை கீழ் இழுக்கும் நமக்கு தரும். கீழ் வரும் குளிர் காற்று நமது உடலில் இருக்கும் வியர்வையை ஆவியாக செய்து நமது உடலை குளிர்விக்க செய்கிறது.

ஃபேன் counter-clockwise திசையில் சுற்றும் போது ஃபேன் பிளேடுகள் இடது மேலிருந்து வலது கீழாக சுழலும். அதனால் தான், ஃபேன்க்கு கீழ் நிற்கும் போது அதிக காற்றை உணர முடிகிறது. ஃபேன் counter-clockwise திசையில்சுழல்வதால் நமது உடலின் வெப்பத்தை குறைகிறது. இதுவே குளிராக இருக்கும் அறையில் வெப்பத்தை உணர என்ன செய்ய வேண்டும்..? அதற்கும் ஒரு வழி இருக்கிறது.

அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் வீட்டில் இருக்கும் ஃபேன் இரு திசைகளிலும் சுழலக் கூடியது. பருவ காலத்திற்கு தகுந்தவாறு ஃபேன் சுற்றும்  திசையை மாற்றிக் கொள்ளலாம். வெயில் காலத்தில் counter-clockwise திசையிலும், குளிர் காலத்தில் clockwise திசையிலும் சுற்றும் படி மாற்றி கொள்ளலாம்.

clockwise ஃபேன் சுற்றும் போது கீழ் இருக்கும் குளிர் காற்றை மெதுவாக மேல் நோக்கி இழுக்கும். திரும்ப மேலே வந்த குளிர் காற்று சுழற்சியாக தரைக்கு செல்லும். இது போல செய்வதால் அரை கதகதப்பாக இருக்கும், ஹீட்டர் பயன்ப்டுத்த தேவை இல்லை. அறையை மிதமான ஹீட்டில் வைத்து கொள்ளலாம். இப்படி மாற்றிக்கொள்ளும் ஃபேன்களால் மின் கட்டணம் 15% வரை குறைகிறது. பட்டனை மாற்றினால் ஃபேன் சுற்றும் திசையை மாற்றலாம். | Hundi: சும்மா இல்லைங்க! நிறைய உண்டியல்கள் பன்றி வடிவத்தில் இருப்பதற்கான காரணம் என்ன தெரியுமா?