சமீப காலமாய் சினிமா ஏன் அதிகமாகக் கலாய்க்கப்படுகிறது?
  • 14:47PM Nov 21,2017 Chennai, Tamil Nadu 600003, India
  • Written By KV
  • Written By KV
  • 14:47PM Nov 21,2017 Chennai, Tamil Nadu 600003, India

முன்னெல்லாம் சினிமா பார்க்கிறதுக்கே செம சுவாரஸ்யமா இருக்கும். கதை ஒரளவுக்கு மொக்கையா இருந்தாலும், ஆன்னு வாயைப் பொளந்துட்டு பார்த்திட்டிருப்போம்.  ஆனா இப்பல்லாம் சினிமா பார்க்கிறதுக்கே கொஞ்சம் கடுப்பா இருக்கிறது வாஸ்தவம்தான்.  உண்மையைச் சொன்னா, முன்பை விட சினிமா எல்லா விதத்துலயும் பல மடங்கு முன்னேறி இருக்கு.  கதைக் களம், தொழில்நுட்பம், கேமிரா, மியூசிக்னு பட்டையைக் கிளப்புனாலும். ஏன் இப்போ இருக்கிற பசங்களுக்கு படத்துல என்னவோ பத்தலைன்னு ஃபீலிங் ஏற்படுறதுனாலயே ஓவரா காலாய்ச்சிட்டிருக்காங்க.  படத்தை எப்படி எடுத்தாலுமே. என்னடா காரணம்னு பார்த்தாத்தான் புரிஞ்சது என்ன காரணம்னு.

காரணம் அரசியல்.  காதலைத் தவிர, நட்பு, துரோகம், வளர்ச்சி, சூழ்ச்சி, போராட்டம், எதிர்பாராத ட்விஸ்ட்னு முன்னெல்லாம் நியூஸை டிவிலயே பார்க்காத பசங்க எல்லாரும் கூட மொபைல்ல நியூஸ் ஆப் வச்சு பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க. அதிலயும் குறிப்பா போன வருஷத்துல இருந்து, ப்ரேக்கிங் நியூஸ் எந்தச் சேனல்லயும் சொல்லலனைன்னா, இன்னைக்கு பாதிப் பேருக்கு தூக்கமே வராது.  ராத்திரி 12 மணி வரைக்கும் உட்கார்ந்து வெறிக்க வெறிக்க டிவில ப்ரேக்கிங் நியூஸ் வராதான்னு பார்க்க ஆரம்பிச்சுட்டாங்க.  முன்னை விட அதிகமா செய்திக்கு அடிக்ட் ஆகிட்டாங்க.  என்ன சொன்னாலும், சினிமால இந்தளவுக்கு காட்ட முடியாதுங்கறதாலயே இப்போ சினிமா போரடிக்கிற மாதிரி நினைக்க ஆரம்பிச்சுட்டாங்க. 

அடுத்தது பார்த்தீங்கன்னா, டூ வே இன்டராக்சன்.  அதாவது இருபுறமும் தொடர்பு கொள்வது.  சினிமாவைப் பொறுத்தவரை பஞ்ச்-ல ஆரம்பிச்சு பஞ்ச் டயலாக் வரைக்கும் ஹீரோதான் எல்லாத்தையும் பண்ணனும்.  ஆனா, இந்தப் பக்கம் நிலைமை அப்படி இல்லை… சமூக வலைத்தளங்கள்ல பொது மக்களே ஹீரோவா, வில்லனா, காமெடியனா தேவைக்கு ஏத்த மாதிரி மாறிக் கொள்கிறார்கள்.  எதிர்தரப்பும் சும்மா இருக்கிறதில்லை. தேவைக்கேற்ப அவங்களே காமெடி, வில்லன் காரெக்டர்ல அவங்களே கரெக்டடா வந்து சிக்கிக்குவாங்க.  உதாரணத்துக்கு பார்த்தா, ஆத்து மேல சோலார் பேனல், தண்ணி மேல தெர்மோகோல், ஊழலை ஒழிச்சுட்டேன்னு சொன்ன அடுத்த மாசமே அவங்களே ஊழல் வழக்கு போடுறது, அடுத்த மாசம் மறுபடி ஹவாலா மூலமா பணத்தை மாத்தி லஞ்சம் கொடுத்ததா அவங்களே மறுபடி வழக்கு போடுறது மாதிரி வேற லெவல் காமெடி எல்லாம் சினிமால எப்போ வர்றது???

அது மட்டுமில்லை, ட்விஸ்ட் எல்லாம் சான்ஸே இல்லை… ஆக்ராஷமா சண்டை போட்டுகிட்டிருக்கிற ரெண்டு பேரு, ரெய்டு முடிஞ்சவுடனே ஒன்னா சேர்ந்து கூட இருந்தவன் வீட்டுக்கு ரெய்டு அனுப்பறதும், ரெய்டு முடிஞ்சதம் அரெஸ்ட்னு பார்த்தா ஒரு சின்ன கண்டம் கூட இல்லாம ஸ்டைலா வெளி வர்றதும், திடீர்னு ஒரே கட்சி நாலா பிரியறது இப்படி எல்லாம் எதிர்பார்க்காத ட்விஸ்ட் எல்லாம் கண்டிப்பா எந்தப் படத்துலயும் வாய்ப்பேயில்லை.  ஒரு இட்லியை வச்சுக் கூட ட்விஸ்ட் குடுக்க முடியும்னா அது இங்கதான்.  நேரா பிக் பாஸ் செட்டை விட்டு கோட்டைக்கு வர்றதெல்லாம் சத்தியமா எந்த டைரக்டரும் கற்பனை கூட பண்ணிப் பார்க்க முடியாது.  ஒரு பிரச்சினை முடிஞ்சதுன்னு நினைக்கிறப்போ அதை விடப் பெரிசா இன்னொரு பிரச்சினையைக் குடுக்கிறதெல்லாம் சத்தியமா வேற லெவல்தான்.

120 வித்த டிக்கட்டை 200 ரூபாய் பண்ணிட்டு, அதையும் FDFS-னு சொல்லி 3000 ரூபாய் வரைக்கும் வித்துகிட்டிருக்கற வேளையிலே, டிவிலயே சும்மா அதை விட இன்ட்ரெஸ்ட்டிங்கா ப்ரேக்கிங் நியூஸா காட்டுனா… ஏங்க நீங்களே சொல்லுங்க, கழுவி ஊத்தாம என்ன பன்றது???          

You have answered {{ no_of_answered }}/{{ questions.length }}.
Top